ஆஸ்பத்திரி தெரு சாலையில் ரூ.17.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி!!


அதிராம்பட்டினம், போஸ்டாஆபிஸ் ரோட்டில் இருந்து ஈசிஆர் சாலை செல்லும் முக்கிய சாலையாக திலகர் தெரு சாலை உள்ளது. இந்த வழியாக 3 தனியார் மருத்துவமனையும் ஒரு அரசு மருத்துவமனையும், வலது புறமாக சென்றால் பேருந்து நிலையமும், இடது புறமாக சென்றால் ஒரு தனியார் மருத்துவமனையும், கடைத்தெருவும் உள்ளது.


இந்த வழி அதிகளவிலான பள்ளி வாகனங்களும் செல்லும் பாதையாக அமைந்துள்ளது. பல வழிகளுக்கு இந்த பாதை முக்கியமான ஒன்றாக கருதபடுகிறது. இந்நிலையில் இந்த பாதை கடந்த பல வருடங்களாக பழுதடைந்து பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியது. இதுகுறித்து அப்பகுதி மக்களும் பலமுறை பேருராட்சி மன்றத்தில் நடவடிக்கை எடுக்க சொல்லியும் எந்த பலனும் இல்லை. இந்த நிலையில் தற்போது இங்கு சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக போன மாதம் ரோட்டை அளவு எடுத்து ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது.

அதன் பின்னர் இரண்டாம் கட்டமாக இன்று பிஸ்மி மெடிக்கல் முதல் அரசு மருத்தவமனை வரை பழைய ரோட்டை பெயர்த்தெடுத்து பிறகு ரோலர் மூலம் அப்பாதையை சரிப்படுத்தி வருகின்றனர். மீதமுள்ள சாலை பணிகளை சீக்கிரமாக முடித்து தரமான சாலை அமைத்து தருமாறும் அப்பகுதி மக்கள் கேட்டுகொண்டுள்ளனர்.

,மக்கிமா

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!