செல்போன் பயன்படுத்துவதின் தீமைகள் (பகுதி. 2).


அலைபேசியின் ஆபத்துக்கள்

இது அலைபேசியின் (செல்போன்)யுகம் என்று சொல்வது மிகையே அல்ல. இன்று அங்கிங்கெனாதபடி எங்கும் எல்லாருடைய கைகளிலும் தவழ்கிறது இந்த கைபேசி. இந்த அலைபேசியினால் பல நன்மைகள் கிடைக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. சிறந்த, விரைவான, எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய தொலைத் தொடர்பு சாதனம் இது. வணிகர்கள், பயணிகள், மருத்துவர்கள் என பல தரப்பட்ட மக்களுக்கும் அவசரத் தொடர்பு ஆதரவாளனாக அலைபேசி விளங்குகிறது.
இருப்பினும், அலைபேசியின் ஆபத்துகள் பற்றியும், தீமைகள் பற்றியும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் அறிவியலாளரும், சமூக ஆர்வலர்களும். அலைபேசியினால் கிடைக்;கும் நன்மைகளைவிட, ஏற்படும் ஆபத்துகளே அதிகம் என்று இவர்கள் எச்சரிக்கின்றனர்.


உயிருக்கே ஆபத்து

அலைபேசியை அதிகம் பயன்படுத்துவது உயிருக்கே உலை வைக்கும் என்றால் நம்புவதற்கு கொஞ்சம் கடினம்தான். ஆனால், அது உண்மைதான். ஷீலா ப்ரைஸ் என்னும் அமெரிக்கப் பெண்மணி தான் வேலை செய்யும் அலுவலகத்தில் தொடர்ந்து அலைபேசியைப் பயன்படுத்தியதால் மூளைப் புற்றுநோய்க்குப் பலியானார். டாக்டர் நாக்மன் பிராட்பர் என்னும் மருத்துவர் இந்த உண்மையை நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் எண்பித்து முதல் எச்சரிக்கை மணியை அடித்தார்.

உருவாகும் நோய்கள்

அலைபேசியைப் பயன்படுத்தும் அனைவரும் சாவை உடனே சந்தித்து விடுவதில்லை. ஆனால், நிச்சயமாக நோய்களால் தாக்கப்படுவர் என்பதை பல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக, அலைபேசி வெளியேற்றும் மின்காந்த அலைகள் (நுடநஉவசழ ஆயபநெவiஉ குசநஙரநnஉநைள) லுக்கேமியா என்னும் இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய்கள், வலிப்பு நோய் மற்றும் மூளைப் பாதிப்பு போன்ற நோய்களை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அத்துடன், அலைபேசியை அதிகம் பயன்படுத்தும் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படும் என்றும் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சுற்றுச் சூழலுக்கு ஆபத்து

இன்று அலைபேசிக் கோபுரங்கள் ஏராளம் நிறுவப்பட்டுள்ளன. இவை மூலம் பரவும் மின்காந்த அலைகள் சுற்றுச் சூழலுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று சூழல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பறவை இனங்கள், சிறு பூச்சிகள், வண்டுகள் போன்றவை இந்த மின் காந்த அலைகளால் தாக்கப்படுகின்றன என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வீணாகும் நேரம்

அறிவியல் தளத்திலிருந்து, சமூகத் தளத்திற்கு வந்தால், இன்னும் பல தீமைகளைச் சந்திக்கிறோம். இவற்றுக்கு ஆய்வுகளோ, அறிக்கைகளோ தேவையில்லை. நம் அன்றாட அனுபவங்களே இவற்றை உறுதிப்படுத்துகின்றன. அலைபேசியின் வரவுக்குப் பிறகு ஏராளமான நேரம் விரயமாக்கப்படுவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். குறிப்பாக, இளைஞர்கள், மாணவர்கள் தங்களின் பொன்னான நேரத்தை அலைபேசியில் உரையாடியும், குறுஞ்செய்திகள் அனுப்பியும் வீணாக்குகிறார்கள். அவசியமான பணிகளுக்கு அலைபேசி பயன்படுத்தப்படுவதைவிட, பொழுதுபோக்கிற்கும், உறவுத் தொடர்புகளுக்குமே இன்று அதிக நேரம் அலைபேசியில் செலவாகிறது.

பண விரயம்

அலைபேசியில் அதிகம் பேசப் பேச பணம் அலையாகக் கரைகிறது. முன்பெல்லாம், தொலைபேசி மட்டுமே இருந்த இல்லங்களில் கூடுதலாக அலைபேசிகளும் பயன்படுத்தப்படுகின்றன. அலைபேசியின் செலவு அவசியமற்ற செலவு என்பதை பெரும்பாலானவர்கள் உணராத அளவுக்கு அலைபேசிப் பைத்தியம் மக்களை ஆட்கொண்டிருக்கிறது என்பது வேதனையான உண்மை.

பாழாகும் படிப்பு

இந்தியாவில் மட்டுமல்ல, பெரும்பாலான இதர நாடுகளிலும் மாணவர்கள் அலைபேசியைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்னும் கோரிக்கை வலுவடைந்து வருகிறது. மாணவர்கள் தங்களின் நேரத்தையும், கவனத்தையும் அலைபேசி மூலம் இழந்து வருகின்றனர். அது மட்டுமல்ல, அலைபேசிப் பயன்பாடு மூளையின் நரம்புகளைப் பாதித்து, கவனம் செலுத்தும் ஆற்றலைக் குறைக்கிறது, நினைவாற்றலைப் பாதிக்கிறது என்பதையும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, மாணவர்கள் நிச்சயமாக அலைபேசியைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.

அடிமைப் பழக்கம்

மது, போதைப் பொருள் போலவே அலைபேசிப் பயன்பாடும் ஓர் அடிமைப் பழக்கமாக மாறிவருகிறது.; இளைஞர்கள் அலைபேசிக்கு அடிமையாகி விட்டனர் என்றும், அலைபேசியைப் பயன்படுத்தாமல் இருந்தால் பித்துப் பிடித்தவர் போலாகிவிடுகின்றனர் என்றும் சீனாவில் ஆய்வு செய்து கண்டிருக்கின்றனர். நமது நாட்டிலும் அலைபேசி அடிமைகள் நிறைய பேர் இருக்கின்றனர் என்று அடித்துச் சொல்லலாம்.

பண்பாட்டுச் சீர்கேடு

பேருந்து நிலையம், மருத்துவமனை போன்ற பொது இடங்களில்கூட அருகே இருக்கும் சக மனிதர்களைப் பற்றித் துளியும் கவலைப்படாமல் அலைபேசியில் வெட்டிப்பேச்சுப் பேசும் நாகரீகமின்மை எங்கும் பரவி வருகிறது. வழிபாட்டுத் தலங்கள், கருத்தரங்குள் போன்ற இடங்களிலும்கூட அலைபேசியை அணைத்து விடுங்கள் என்று அறிவிப்புச் செய்யும் அவல நிலையில் இருக்கிறது நம் பண்பாடு.

விபத்து

அலைபேசியைப் பயன்படுத்திக்கொண்டே வாகனம் ஓட்டுவதனால் விபத்துகள் நிகழ்கின்றன என்பதை உணர்ந்து விழிப்புணர்வுப் பதாகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும், இந்த இழிவான பழக்கம் குறைந்தபாடில்லை என்பதை அன்றாடம் நாம் பார்க்கிறோம்.

ஒழுக்கவியல் தீமைகள்

உயிர் காக்க, அவசரத் தேவைகளுக்கு, பயண நேரத்தில் என அலைபேசியின் நல்ல பயன்பாடுகள் பல இருந்தாலும்கூட, அதே அலைபேசி பல தீய செயல்பாடுகளுக்கும் பயன்படுகிறது என்பது அச்சத்தைத் தருகிறது. கொலை, கொள்ளை, விபச்சாரம், பெண்களை இழிவுசெய்தல் போன்ற சமூகத் தீமைகளுக்கும் அலைபேசியைப் பயன்படுத்தி, தொழில் நுட்பம் என்பது இருபறமும் கூர் வாய்ந்த கத்தி என்பதை எண்பிக்கின்றனர் சமூக விரோதிகள்.
இன்னும் பலவற்றை அடுக்கலாம். எடுத்துக்காட்டாக, அலைபேசியைப் பயன்படுத்துவதால் இறைவன்மீது கொள்ளும் நம்பிக்கைகூட குறைந்து போகிறது என்று ஆன்மீகவாதிகள் குறைசொல்கின்றனர்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!