சவுதியில் வரும் 2018 ஜன.1 முதல், அனுப்பும் பணத்திற்கு 5 % VAT கட்டணம் அமல்!


சவுதியிலும் 2018 ஜனவரி 1 முதல் பணம் அனுப்பும் சேவை கட்டணத்தின் மீது 5% வாட் வரி அமல்படுத்தப்படள்ளது.


சவுதி அரேபியாவில் எதிர்வரும் 2018 ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஊருக்கு பணம் அனுப்பும் சேவை கட்டணம் மீது 5% வாட் வரி வசூலிக்கப்படவுள்ளது, இது நாம் அனுப்பும் மொத்த பணத்தின் மீது அல்லவென்று வாட் வரி வசூலுக்கு பொறுப்பான 'ஜகாத் மற்றும் வரிகளுக்கான பொது ஆணையம்' (General Authority of Zakat and Tax  - GAZT) தெரிவித்துள்ளது.

எனினும் பல்வேறு நிதி சார்ந்த வேறு பல சேவைகள் வாட் வரியிலிருந்து விலக்கு பெற்றுள்ளன. குறிப்பாக லோன் வட்டி, லோன் தொகை மற்றும் கிரடிட் கார்டுகள், அடமானங்கள், நிதிசார் குத்தகை, பணம் மற்றும் பத்திரங்கள் பரிவர்த்தனை, கரண்ட் டெபாஸிட், சேமிப்பு கணக்குகள் மற்றும் இன்ஷூரன்ஸ் பாலிஸிகள் போன்றவை.

மேலும், வீட்டு வாடகை, மருந்துகள், பாஸ்போர்ட், புதிய லைசென்ஸ் மற்றும் புதுப்பித்தல் ஆகியவையும் விலக்களிக்கப்பட்டுள்ளன. அதேபோல் வளைகுடா அல்லாத பிற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகள், வளைகுடா நாடுகளில் குடியிருக்கும் மக்களுக்கு செய்யப்படும் சேவைகள், பொருட்கள் மற்றும் பயணிகளின் சர்வதேச போக்குவரத்து, சர்வதேச போக்குவரத்து தொடர்பில் ஏற்படும் பழுதுகளை நீக்க, பராமரிக்க இறக்குமதி செய்யப்படும் தரமான உதிரி பாகங்களின் மீதும் வாட் வரி விதிக்கப்படாது.

Source: Saudi Gazette

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!