அமீரகத்தில் வரும் 2018 ஜன.1 முதல் அனைத்து உணவுப் பொருட்கள் மீது 5% வாட் வரி அமல்!


அமீரகத்தில் எதிர்வரும் 2018 ஜனவரி 1 ஆம் தேதி முதல் ரொட்டி (குபுஸ்), அரிசி உட்பட அனைத்து உணவுப் பொருட்களின் மீதும் 5% வாட் வரி வசூலிக்கப்படும் என மத்திய வரி ஆணையம் (Federal Tax Authority) அறிவித்துள்ளது.


2015 ஆம் ஆண்டு வாட் வரி சம்பந்தமான அறிவிப்புக்கள் வெளியான போது சுமார் 94 வகையான உணவுப் பொருட்களுக்கு வாட் வரியிலிருந்து விலக்களிக்கப்படும் என உறுதி கூறப்பட்டிருந்தது. (நிர்மலா சீதாராமன் என்ற பீஜேபியின் மத்திய அமைச்சர் தமிழக மாணவர்களுக்கு இந்த வருடம் மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்களிக்கப்படும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வையுங்கள் எனக்கூறி விட்டு தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவில் மண்ணை அள்ளி போட்டாறே அதுபோல)

வாட் வரியின் மூலம் ஆண்டுக்கு 7 பில்லியன் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன் இந்த வருவாய் நாட்டை நவீனமயமாக்கவும் (Modernization), அசூர வளர்ச்சிக்கும் (Fast Development) பயன்படும் என கூறப்படுகிறது.

பொருட்கள் மற்றும் சேவைகள் மீது விதிக்கப்படும் வாட் வரியின் கீழ் பொது போக்குவரத்து, பயணிகள் விமானச் சேவை, தங்கம் போன்ற உலோகங்களின் முதலீடு, கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றின் மீது வரிவிதிக்க வளைகுடா அரபு நாடுகள் சம்மதித்து கையெழுத்திட்டிருந்தன.

Source: Gulf News

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!