சவுதி அரேபியாவில் 2018 ஜனவரி 1 முதல் தொலைத்தொடர்பு கட்டணங்கள் உயர்வு!




சவுதி அரேபியாவில் 2018 ஜனவரி 1 முதல் தொலைத்தொடர்பு கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளது.

வாட் வரி (Value Added Tax - VAT) அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 160 உலக நாடுகளில் ஒன்றாக சவுதி அரேபியா 2018 ஜனவரி முதல் இணையவுள்ளது என்றாலும் உலகிலேயே மிகக் குறைந்த 5% வாட் வரி உள்ள நாடாகவும் சவுதி அரேபியா விளங்கும்.

வாட் வரி அறிமுகத்தால் இன்டெர்நெட் டாட்டா பேக், மொபைல் மற்றும் லேண்ட் லைன் தொலைபேசி கட்டணங்களும் 5 சதவிகிதம் உயர்கின்றன. சவுதியில் 43.63 மில்லியன் மொபைல் போன் சந்தாதாரர்களும், 24 மில்லியன் இன்டெர்நெட் டாட்டா பயனாளர்களும், 3.75 லேண்ட் லைன் உபயோகிப்பாளர்களும் உள்ளனர்.

உதாரணத்திற்கு 100 ரியாலுக்கு ரீசார்ஜ் செய்தால் 95 ரியாலுக்கே தொலைத்தொடர்பு பயன்களை அடைய முடியும். எனினும், GCC நாடுகள் எனப்படும் வளைகுடா நாடுகளுக்குள் 'ரோமிங்' அடிப்படையில் தொலைத் தொடர்பு சேவைகளை உபயோகிப்பவர்கள் இந்த வாட் வரியிலிருந்து விலக்கு பெறுவர்.

Source: Saudi Gazette / Msn

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!