2018 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பிக்கலாம்..!


2018 ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு செல்பவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என இந்திய ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது. நேற்று (15-11-2017) முதல் ஆன்லைனின் இந்த விண்ணப்பிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. http://hajcommittee.gov.in என்ற இணையதளத்திற்குள் சென்று அதில் உள்ள ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவேண்டும்.


2018 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் ஹஜ் கமிட்டி மூலமாக 15-11-17 முதல் 07-12-17 வரை வழங்கப்படும் .
Applications / விண்ணப்பங்கள்
1- ஹஜ் கமிட்டி மூலம் நேரடியாக பெற்றுகொள்ளலாம்……

2- www.hajcommitte.com – என்ற இணையதளத்தில் டவன்லொடு செய்து கொள்ளலாம்.

3- ஜெராக்ஸ் எடுத்தும் விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்த ஹஜ் விண்ணப்பங்கள் சமர்பிக்க கடைசி தேதி 07-12-17 ஆகும் .
ஆன்லைன் மூலம் பதிவு / பூர்த்தி செய்யும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக பிரின்ட் எடுத்து சென்னை ஹஜ் கமிட்டி க்கு அனுப்பி வைக்க வேண்டும் .

முகவரி

Tamilnadu State Haj Committee
13/7 First Floor
Rosy Towet
Numgampakkam High Road
Mahatma Ghandi Road
CHENNAI – 600 034
044- 28252519
044- 28227617
இனி நான்கு முறை விண்ணப்பவர்களுக்கு முன்னுரிமை இல்லை .
70 வயது கடந்தவர்களுக்கு உடன் செல்ல ஒருவருக்கு குலுக்கல் இன்றி தேர்ந்தெடுக்க படுவார்கள் .

ஹஜ்ஜுக்கு செல்பவர்களின் பாஸ்போர்ட் வேலிடிடி கண்டிப்பாக 14-02-2019 வரை இருக்க வேண்டும் .

ஒரு கவரில் 4 பேர் மட்டுமே செல்ல முடியும். ( இரண்டு குழந்தைகளையும் சேர்த்து ஆறு வரை……. )

ஒரு ஹாஜிக்கு 300/- வீதம் விண்ணப்பத்துடன் பணம் செலுத்த வேண்டும் .
ஹஜ் கமிட்டி க்கு செலுத்த வேண்டிய அனைத்து தொகைகளையும் கண்டிப்பாக SBI Bank அல்லது UBI Bank மட்டுமே பணம் செலுத்த வேண்டும் .
கடந்த வருடம் அதாவது 2017 – ல் – ஹிஜ்ரி 1438 – ல் கிரீன் கேட்டகிரிக்கு = 2,34,000/- ,அஜீஜியா கேட்டகிரி =2,02,000/- செலவு ஆனது Approximate ( தோராயமாக )

சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தவறான தகவல்கள் அளிக்கும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் .

அனைத்து விண்ணப்பங்கள் உடன் கண்டிப்பாக {உறுதி மொழி} சாலமன் டிக்ளேரஷன் { SOLEMN DECLARATION } இணைக்கப்பட வேண்டும். { அதாவது 70+ Solemn Declaration } { ஜெனரல் General Solemn Declaration }
அனைத்து விரிவான விவரங்கள் www.hajcommittee.com மூலம் அறியலாம் .


0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!