துபாயில் விபத்துகளை குறைக்க நிறம் மாறும் சாலைகள்!


துபாயில் கடுமையான சாலை விதிகள் பின்பற்றப்பட்டாலும் ஒரு சில சாலை விபத்துகள் நடக்கத்தான் செய்கின்றன. அந்த ஒருசில சாலை விபத்துகளையும் தடுத்து விபத்துகளே இல்லாத சாலைகளாக மாற்ற 'Mission zero accident' என்ற நோக்கத்துடன் களமிறங்கியுள்ளது #துபாய் சாலை போக்குவரத்து நிறுவனம்.தற்போது வாகனங்களில் பயணிப்பவர்களில் 1,00,000 பேருக்கு 6 பேர் விபத்தில் சிக்குவதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது. இதை 2021ம் ஆண்டுக்குள் 1,00,000 பேருக்கு 3 பேராக குறைக்கவும் பிறகு அதை 0 என்ற நிலைக்கு மாற்றவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.அனைத்து சாலைகளும் ரேடார் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட அதிகமாக சென்றாலோ, சாலை விதிகளை மீறினாலோ சாலை ஓரங்களில் உள்ள தானியங்கி கேமராக்களால் படம் பிடிக்கப்பட்டு அபராதமும், தண்டனையும் விதிக்கப்படுகிறது.


அபராதம் விதிப்பது மட்டுமே எங்கள் நோக்கம் அல்ல விபத்தில்லா சாலைகளை உருவாக்குவதே எங்கள் இலக்கு என RTA தெரிவித்துள்ளது.கவனச் சிதறல் ஏற்பட்டு சில நேரங்களில் அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட அதிகமான வேகத்தில் சிலர் வாகனத்தை இயக்குகின்றனர். அதனை தடுக்க குறிப்பிட்ட இடைவெளியில் சாலையின் நடுவே சிவப்பு வண்ண சாயம் பூசப்பட்டு அந்த சாலையின் அதிகபட்ச வேகம் எழுதப்பட்டிருக்கும்.

சில இடங்களில் 120 கி.மீ அதிகபட்ச வேகமிருக்கும் சாலை 100 கி.மீ அதிகபட்ச வேக சாலையாக குறைக்கப்பட்டிருக்கும். அதை சிலர் கவனிக்கத்தவறி 120கி.மீ வேகத்திலேயே 100 கி.மீ வேகம் போகக்கூடிய சாலையில் பயணிக்கிறார்கள். இதனால் விபத்து ஏற்படுகிறது. இதை தவிர்க்க 120கி.மீ வேக சாலை 100 கி.மீ வேகத்திற்கு குறையும்போது அங்கு சிவப்பு நிற வண்ணத்தில் சாலை தெரியும். இதன் மூலம் வாகன ஓட்டிகள் வேகத்தை குறைக்கிறார்கள். விபத்துகளும் தவிர்க்கப்படுகிறது.இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து நகரின் பல சாலைகளும் சிவப்பு கம்பளத்திற்கு மாறிவருகின்றன.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!