தமிழகத்துக்கு சுனாமி அச்சுறுத்தல் எதிரொலி கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஒத்திகை!


தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை பயிற்சி நடைபெறுவதாக அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் உள்பட
உலக நாடுகளை கடந்த 2004ம் ஆண்டு சுனாமி பேரலை தாக்கியது. இதில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து, டிசம்பர் மாதம் என்றாலே பேராபத்து மிகுந்த மாதமாக மக்கள் உணர்கின்றனர். சென்னையில் வெள்ளம் ஏற்பட்டது, வர்தா புயல் தாக்கியது இவையெல்லாம் டிசம்பரில் தான் நடந்தது. இந்த சூழலில், இந்த ஆண்டும் காலநிலை மாற்றத்தால் டிசம்பர் மாதம் சுனாமி தாக்கும் என கேரளாவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று சமீபத்தில் அதிர்ச்சி தகவல் வெளியிட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி பிரதமருக்கும் அந்நிறுவனம் கடிதம் அனுப்பியது.

ஆனால், சுனாமிக்கு வாய்ப்பில்லை என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இருப்பினும் சமூகவலைதளங்களில் தொடர்ந்து சுனாமி குறித்து தகவல் பரவுவதால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில், தமிழக கடலோர மாவட்டங்களில் மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடத்தப்போவதாக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு:
தமிழ்நாடு மற்றும் பிற கடலோர மாநிலங்களின் சுனாமி முன்னெச்சரிக்கை பற்றிய விவரங்கள் குறித்து, ஐதராபாத்தில் உள்ள இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு தெரிவிக்கின்றது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமானது, இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்புடன் இணைந்து, ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஓடிசா ஆகிய மாநிலங்களிலுள்ள கடலோர மாவட்டங்களில்,  சில கிராமங்களை தேர்ந்தெடுத்து, சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கொண்ட மாதிரி பயிற்சியினை நாளை நடத்துகிறது.

இப்பயிற்சியின் முன்னோட்டமாக, நேற்று முன்தினம் சென்னை, வருவாய் நிருவாக ஆணையர், மாநில நிவாரண  ஆணையர்  அலுவலகத்தில்,  முதன்மை செயலர், வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் அவர்களின் தலைமையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக்குழு ஆலோசகர்  மேஜர் ஜெனரல் (ஓய்வு) வி.கே.தத்தாவின் வழிகாட்டுதலின்படி, கடலோர மாவட்ட ஆட்சியர்கள், முப்படை அதிகாரிகள், காவல்துறை, கடலோர பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, பெருநகர சென்னை மாநகராட்சி  மற்றும் பல்துறை அலுவலர்களுடன்  காணொலி காட்சி மூலம் ஆலோசணை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நாளை நடைபெறவுள்ள மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை எவ்வாறு மேற்கொள்வது என விளக்கினார்.  

மேலும்,   தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக்குழுவின் ஆலோசகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) வி.கே.தத்தா, தயார் செய்யப்பட்ட விளக்கக் காட்சிகள் மூலம் மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக விளக்கினார். சுனாமி வரும்பட்சத்தில், இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பின் மூலமாக சுனாமி எச்சரிக்கை தொடர்பான முன் அறிவிப்புகள் பெறப்படும் போது, அத்தகவல் பரிமாற்றமானது அரசுத்துறைகள் மூலம் பாதிக்கப்படக்கூடிய  மக்களுக்கு  எவ்வாறு சென்றடைகிறது என்பதை நாளை நடைபெறும் ஒத்திகையின் மூலம் சோதிக்கப்படும்.இம்மாதிரி பயிற்சி ஒத்திகையானது,  கீழ்க்கண்ட கடலோர மாவட்டங்களில் உள்ள கடலோர கிராமங்களில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!