கடலோர மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!!


சென்னை : புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி, வங்க கடலில் அடுத்தடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. கடந்த 20ம் தேதி அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்க கடல் வழியாக இலங்கையை கடந்து நேற்று அரபிக் கடலுக்கு சென்றது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் நேற்று பல இடங்களில் கனமழை பெய்தது. அதேபோல், சென்னை, காஞ்சிபுரம், நாகை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் நேற்று மழை பெய்தது. அதிகபட்சம், ராமநாதபுரத்தில் 14 செ.மீ மற்றும் சென்னை செம்பரம்பாக்கத்தில் 12 செ.மீ மழை பதிவானது.

இதற்கிடையில், தென்மேற்கு வங்க கடலில் நேற்று மற்றொரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. இதுவும் இன்னும் ஓரிரு நாளில் தமிழக கடல் பகுதி நோக்கி நகரும் என தெரிகிறது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேசமயம், தெற்கு அந்தமானில் தற்போது புயல் சின்னம் உருவாகியுள்ளது. அங்கு நாளை உருவாகும் மற்றொரு புதிய காற்றழுத்த தாழ்வுநிலை அடுத்த 22 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். இது மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாற அதிகம் வாய்ப்புள்ளது. எனவே, வங்க கடலில் ஓரிரு நாளில் புயல் உருவாகலாம் என தனியார் வானிலை ஆள்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுபோன்று வங்க கடலில் அடுத்தடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதால் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் வரும் நாட்களில் கனமழை கொட்டும் என வானிலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஸ்டெல்லா கூறுகையில், ‘தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பலவீனமடைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக அரபிக் கடலில் நிலை கொண்டுள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள இலங்கை பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும். உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையில் விட்டு, விட்டு மிதமான மழை பெய்யும். சில இடங்களில் கனமழை பெய்யும்’ என்றார்

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!