ஓமனில் 47 வது தேசிய தினம் - 257 கைதிகள் விடுதலை !


ஓமனின் 47வது தேசிய தினம் இன்று கொண்டாடப்பட்டதை, ஓமனின் மன்னரும் ராணுவத்தின் சுப்ரீம் கமாண்டருமான சுல்தான் கபூஸ் பின் சயீத் அவர்கள் ஸீப் (SEEB) மாநிலத்தின் அதிரடிப் போலீஸ் படை தலைமையக மைதானத்தில் ஓமன் நாட்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.


ஓமானின் தேசிய தினத்தை முன்னிட்டு மன்னர் சுல்தான் கபூஸ் பிள் சயீத் அவர்கள் 131 வெளிநாட்டினர் உட்பட 257 சிறைவாசிகளை விடுதலை செய்தார். ஓமன் முழுவதும் தேசிய கொடிகள் பட்டொளிவீசி பறக்கின்றன, மேலும் வாகனங்களிலும் தேசிய தினத்தை போற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு சாலைகளில் வாகன ஓட்டிகள் உற்சாகப் பெருக்குடன் வலைய வருகின்றனர்.

ஓமன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும் தனது பங்காக 47% தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. மஸ்கட் மற்றும் ஸலாலா சர்வதேச விமான நிலையங்களிலிருந்து பிற சர்வதேச தடங்களில் பறக்கும் பயணிகள் நவம்பர் 20 ஆம் தேதி வரை நீடிக்கும் சிறப்புத் தள்ளுபடி டிக்கெட் விற்பனையில் முன்பதிவு செய்து எதிர்வரும் 2018 மே மாதம் 31 ஆம் தேதி வரை பறக்கலாம். எனினும், கீழ்க்காணும் தடங்களுக்கு மட்டும் சிறப்புத் தள்ளுபடி செல்லாது. அனைத்து உள்நாட்டு சேவைகள், கோழிக்கோடு (Calicut), ஜித்தா, மதீனா, தோஹா மற்றும் மணிலா.

Sources: Gulf News & Times of Oman

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!