50 லட்சம் எங்கே ….? கைவிடப்பட்ட செய்னாங்குளம்!!!




அதிராம்பட்டினம் கீழத்தெருக்கு உட்பட்டது செய்னாங்குளம் சுமார் ஒரு வருட காலத்திற்கு முன்பு இந்த குளத்தின் பராமரிப்பு பணி நடைபெற்றது . தமிழ்நாடு அரசின் ஆணை படி தஞ்சை மாவட்டத்தில் அனைத்து குளங்களும் தூர் வாறும் படி ஆணையிட்டது. இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட குளத்தில் ஒன்று தான் கீழத்தெருக்கு உட்பட்ட செய்னங்குளம் . இதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூபாய் 50,00,000 வேலை சுமார் நான்கிலிருந்து ஐந்து மாதம் வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அந்த குளத்தின் மொத்த சேர் மற்றும் அனைத்து கழிவுகளும் ஒரே ஒரு JCB இயந்திரங்கள் மூலம் அள்ளுவதாக கூறி சுமார் 3 மாதங்களை ஒட்டினர் அதன் மொத்த பணிகளும் குறிப்பிட்ட காலத்தில் முடிக்கப்பட்டன . இதில் ஒரு பகுதியாக செய்யப்பட்ட வேலை தான் செடியன் குளத்திலிருந்து செய்னங் குளத்தினை இனைக்கும் முக்கிய பணி அதாவது மழை காலங்களில் செடியன் குளம் முழுவதுமாக நிறைந்த பின்னர் அதன் உபரி நீர் பிலால் நகர் மக்களை தத்தளிக்க வைப்பது வழக்கம் இதனை மாற்றி அமைக்க முன் ஏற்பாடாக செய்யப்பட்து தான் இந்த வாய்க்கால் இணைப்பு பணி ஆனால் மழை காலம் வந்ததும் மீண்டும் வழக்கம் போல் தத்தளித்தது.


மீண்டும் மழை காலங்கள் தொடர்ந்த பின்பு முழுவதுமாக செய்யப்பட்ட வேளை மூன்று பக்கமும் உடைத்து கொண்டு தெருக்களில் உள்ள கழிவு நீர் குளத்தின் உள்ளே புகுந்தது மேலும் இணைக்கப்பட்ட வாய்க்கால்களில் வழியாக தண்ணீர் செல்லமால் வழக்கம் போல் பிலால் நகரில் உள்ள அனைத்து வீட்டுகளிலும் தண்ணீர் புகுந்தத.

மேலும் குளத்தை சுற்றி கரை அமைக்கப்பது அதிலொரு பகுதிக்கு மட்டுமே கல் வைத்து ஒட்டப்படுவது போன்ற அரைகுறை வேலையாள் பெய்த சாதாரண இரண்டு மழைக்கே அந்த பகுதி முற்றிலும் சேதம் அடைந்த தது காரணம் ஊழல்….!!!

இந்த குளத்திற்காக ஒதுக்கீடு செய்ய்யப்பட்ட ரூபாய் 50,00,000-ம் இதில் 20,00,000-க்கு கூட பொருமானம் இல்லாத இந்த குளத்தின் பணியை கண்டு மொத்த அதிரை வாழ் மக்களும் திகைத்தனர்.
இது குறித்து இளைஞர்கள் மற்றும் முஹல்லாவாசிகள் அனைவரும் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெருவித்தனர் .இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது அதிரை மீடியாவின் சார்பாக இந்த பணிக்கான தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த பணியின் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது இன்ஷா அல்லாஹ் வந்த பின் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் .எனவே உங்கள் ஒத்துழைப்பு கண்டிப்பாக அவசியம் நம் அனைவரும் கூட்டாக இனைந்து செயல்படுவோம்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!