இரவு கண்விழிப்பவர்களா நீங்கள் !!!!



இரவு நேரத்தில் தொடர்ந்து தூக்கம் வரவில்லையா? உங்கள் பணியே இரவு நேரத்தில் தானா? இரவு முழுக்க விழித்து செல்போன், சினிமா, கணினியை கவனிப்பவர்களா? நண்பர்களோடு சேர்ந்து தினமும்  இரவைக் கொண்டாடுபவரா?  இவை எல்லாமே ஆபத்தானது என்பதை உடனே புரிந்து கொள்ளுங்கள். இரவில் மட்டுமே சுரக்கும் ‘மெலடோனின்’ என்ற வேதிப்பொருள் இரவில் கண் விழித்தால் சுரக்காது என்கிறது மருத்துவ உலகம். மூளையில் இருக்கும் பினியல் சுரப்பி சுரக்கும் இந்த மெலடோனின், சுரக்காமல் போனால் உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியமும் கெட்டுப்போகும். அது மட்டுமா? நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து எல்லா நோய்களையும் வரவேற்கும் விதமாக உடல் கெட்டு விடுகிறது என்கிறார்கள்.


மேலும் இரவில் கண் விழிப்பதால் ஓய்வு கொள்ள வேண்டிய கல்லீரலும் பாதிப்பை அடைகிறது. கண் தொடங்கி சிறுநீரகம் வரை இரவு தூக்கம் தொலைப்பதால் கடுமையான பாதிப்பை அடைகிறது. பகலில் உறங்குவதால் சரியாக உணவு எடுத்துக்கொள்ளாமல் அல்சர், செரிமானப் பிரச்சினை என முதலில் நோய்கள் ஆரம்பிக்கிறது. மேலும் நரம்புத் தளர்ச்சி, தோல் சுருக்கம், மன அழுத்தம் தொடங்கி எதிர்மறையான எண்ணங்கள், ஆண்மைகுறைவு, கல்லீரல் பிரச்சினை என நோய்க்கு மேல் நோய் பெருகி வாழ்வையே சீர் குலைக்கிறது. இரவு நேர பணி, கேளிக்கை எல்லாம் ‘கண்ணை விற்று சித்திரம் வாங்கும்’ அபாய வேலை தான். எனவே இப்போதே உங்கள் இரவு நேரத்து தூக்கத்தை தொடருங்கள்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!