அதிரையில் புதிதாக போடப்பட்ட தார் சாலையில் திடீர் பள்ளம் - சீரமைக்க கோரிக்கை !!!


தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் ஈஸ்ட் கோஸ்ட் சாலை முதல் - தரகர் தெரு செல்லும் சாலையில், பேரூராட்சி பொது நிதி ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில்  சுமார் 360 மீட்டர் நீளத்தில், புதிதாக தார்சாலை கடந்த சில நாட்களுக்கு முன்பாக  போடப்பட்டது.


இந்நிலையில், இச்சாலையின் ஒரு பகுதி திடீரென பூமியில் உள்வாங்கி பள்ளமாக காட்சியளிப்பதால், இப்பகுதியை கடந்து செல்லும் பெரும்பாலான வாகனங்கள் பள்ளத்தில் விட்டு விபத்துக்குள்ளாக நேரிடைகிறது.

தார்சாலை அமைத்து சில நாட்களே ஆவதால், சாலையின் தரம் குறித்து ஆய்வு நடத்தி, பழுதை உடனடியாக சீர்செய்ய வேண்டுமென அதிராம்பட்டினம் தரகர்தெரு இஸ்லாமிய நற்பணி மன்றம் சார்பில், அதன் நிர்வாகிகள் முகமது ஷாபி, யூனுஸ் கான், இதயதுல்லா, ராஜா முகமது, நியாஸ்கான், பசூல்கான், அதிரை மைதீன், அன்சாரி உள்ளிட்டோர் அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகத்திடம் இன்று சனிக்கிழமை புகார் மனு அளித்தனர்.

புகார் மனுவில் கூறியிருப்பது;


0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!