அமீரக பள்ளியின் கின்னஸ் சாதனையில் ஒருவனாக அதிரை மாணவன் !!!

இன்று 14-11-2017 இந்திய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஷார்ஜாவில் உள்ள இந்தியன் இண்டெர்னேசனல் பள்ளியில் 4882 மாணவ மாணவிகள் சேர்ந்த மிகப்பெரிய மனித கப்பலை UAE கொடி வடிவத்தில் உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இதில் அடங்கியுள்ளனர். இங்கு அதிரை கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த ரஃபி என்பவரது மகன் 1 ஆம் வகுப்பு மாணவன் முஹம்மது ஷாரிக்கும் இந்த அணிவகுப்பில் பங்கேற்று இந்த கின்னஸ் சாதனை
பங்கெடுத்துள்ளார்.
https://youtu.be/T6Ue2toFztEq


இந்தியாவின் முதல் மற்றும் முன்னாள் பிரதமரான ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினம் குழந்தைகள் தினமாக ஒவ்வொரு ஆண்டும் இதேநாளில் கொண்டாடப்பட்டு வருவது அறிந்ததே.

குழந்தைகள் தினத்தையும் அமீரகத்தின் தேசிய தினம் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் நாள் கொண்டாடப்படவுள்ளதை வரவேற்கும் நோக்கத்துடனும் இரு தினங்களையும் போற்றும் விதத்தில் படகு வடிவில் 4,882 மாணவர்கள் இணைந்து அமீரக தேசியக் கொடியை பிரதிபலித்தனர்.

ஷார்ஜாவில் செயல்படும் 'இந்திய சர்வதேச பள்ளி'யின் 1 வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் இச்சாதனை நிகழ்வில் பங்குபெற்றனர். இந்த சாதனை நிகழ்வில் பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனியாக கின்னஸ் சாதனைச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

'வாழ்க்கை என்பது சமுத்திரத்தில் நீந்தும் ஒரு படகு போன்றது' என்ற தத்துவத்தை உணர்த்தும் முகமாகவும், அமீரகத்தின் கலாச்சார சின்னமாகவும் படகு இலங்குவதாலும் 'படகு வடிவில் மாணவர்கள் சீருடை அணிந்து கின்னஸ் சாதனையை நிகழ்த்தினர் என அப்பள்ளியின் முதல்வர் விளக்கமளித்துள்ளார்.



0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!