எச்சரிக்கை!!!. சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு செல்பவரா !!!



இந்தியாவில் இருந்து சவூதி அரேபியாவிற்கு வேலைக்கு வருபவர்களில் அதிகமானவர்கள் வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பும் நிறுவனங்கள் (Recruitment Agencies) மூலமாக வருகிறார்கள். இப்படி வரும் போது பெரும்பான்மையான நிறுவனங்கள் சரியான முறையில் செயல்பட்டு வந்தாலும், ஒரு சில நிறுவனங்கள் முறையான அனுமதி இல்லாமலும், உரிமம் இல்லாத நிறுவனங்களாகவும் இருக்கின்றன.


இது போன்ற உரிமம் இல்லாத நிறுவனங்கள் மூலமாக சவூதி அரேபியாவிற்கு வேலைக்கு வருபவர்கள் வெளிநாடு வரும் முன்பே பொருளாதாரத்தை இழந்து ஏமாற்றப்படுகிறார்கள், அல்லது நினைத்த வேலை கிடைக்காமல் கிடைத்த வேலைகளை செய்து கொண்டு ஏமாற்றப்படுகிறார்கள்.
எனவே, வெளிநாட்டுக்கு வருபவர்கள் தங்களுக்கு விசா கொடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பும் நிறுவனங்களைப் பற்றி சரியான முறையில் தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது சவூதி அரசாங்கம் வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பும் நிறுவனங்களில் இந்த ஆண்டுக்கான உரிமம் இல்லாத நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

சவூதியில் உள்ள இந்தியத் தூதரகம்( Embassy of India, Saudi Arabia) கடந்த 18-11-2017 அன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில் இந்தியாவில் இயங்கி வரும் வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பும் நிறுவனங்களில் ( Recruitment Agencies) உரிமம் காலாவதியான, மற்றும் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலை (List of Expired and Cancelled RA’s) மாநில, மாவட்டங்கள் வாரியாக வெளியிட்டுள்ளது.

49 பக்கங்கள் கொண்ட அந்த அறிவிப்பு இந்த பதிவோடு இணைக்கப்பட்டுள்ளது.

சவூதிக்கு வேலைக்கு வருபவர்கள் மற்றும் இடை நிலையில் செயல்படும் சிறிய டிராவல்ஸ் நிறுவனங்கள் நீங்கள் வெளிநாட்டு வேலைக்காக தொடர்பு கொள்ளும் நிறுவனங்கள் சரியான உரிமம் உள்ள நிறுவனங்கள் தானா என்பதை இதன் மூலம் கண்டறிந்து கொள்ளலாம்.

வெளிநாடு வருகிறோம் என்ற பேராசையில் சரியாக ஆய்வு செய்யாமல்
தவறான நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம்.

https://drive.google.com/file/d/1Pm5NChygUZjCjIwL9KfmIm2PPKug6rUg/view


0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!