பேஸ்புக் பயணாளிகளுக்கு ஒரு ஷாக் செய்தி..!


பேஸ்புக் எல்லா மக்களையும் கண்காணிக்கிறது என அங்கு தலைமையதிகாரியாக வேலை பார்த்த ஷான் பார்க்கர் குற்றம்ச்சாட்டி இருக்கிறார். மேலும் அது குழந்தைகளின் மூளையில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறியிருக்கிறார்.

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தலைமையதிகாரியாக இருந்தவர் ஷான் பார்க்கர். இவர் மார்க் சூக்கர்பர்க்கரால் அதிரடியாக வேலையை விட்டு நீக்கப்பட்டார். இவர் பேஸ்புக் நிறுவனம் தொடங்கிய 45வது நாளில் இருந்து அங்கு வேலை பார்த்து வந்தார். பேஸ்புக்கை உருவாக்கியதில் முக்கிய பங்கு அவருக்கு இருக்கிறது.


தற்போது இவர் பேஸ்புக் குறித்து மோசமாக குற்றச்சாட்டி இருக்கிறார். பேஸ்புக் மக்களின் ஒவ்வொரு செயல்பாட்டையும் கண்காணிக்கிறது என்றுள்ளார். மக்களின் அனுமதி இல்லாமலே அவர்களை பேஸ்புக் நோட்டமிடுவதாக தெரிவித்து இருக்கிறார்.

மேலும் பேஸ்புக்கில் வரும் விளம்பரங்கள் அனைத்தும் குழந்தைகளின் மூளையை பாதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறியிருக்கிறார். அதில் இருக்கும் சிறிய சிறிய ஆப்ஷன் தொடங்கி அப்ளிகேஷனில் நீல நிறம் வரை அனைத்தும் மக்களை வசியப்படுத்தவே என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ஷான் பார்க்கர் பேசும் போது ”பேஸ்புக் மக்களுக்கே தெரியாமல் நிறைய தீய வேலைகளை செய்து வருகிறது. கடவுளுக்கும், அங்கு வேலை செய்பவர்களுக்கும் மட்டுமே இந்த உண்மை தெரியும்” என்று பேசியுள்ளார். இவரது இந்த கருத்து இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!