அதிரை ரயில் நிலைய பணிகள்!!!


அதிரை, பட்டுக்கோட்டை சுற்றுவட்டார மக்களின் நீண்ட நாள் கனவான அகல ரயில் பாதை திட்டம் இன்னும் சில மாதங்களில் நனவாக உள்ளது. அதற்கு உண்டான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பட்டுக்கோட்டை முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் ஏராளமான சிறிய மற்றும் பெரிய ரயில் பாலங்கள் அமைக்கப்பட்டுவிட்டன.


பட்டுக்கோட்டையில் அகல ரயில்பாதை அமைக்கப்பட்டு, ரயில்நிலைய புணரமைப்பு பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

அதிரையிலும் அகல ரயில்பாதைக்கான தண்டவாள கம்பிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. ஜல்லி மற்றும் செம்மண் அடிக்கப்பட்டு தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. பழைய ரயில் நிலைய கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டிடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று கட்டிடத்திற்கு காங்கிரீட் போடப்பட்டுள்ளது. மேலும் நடைமேடை விரிவாக்கப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பணிகள் வேகமாக நடந்து வருவதால் இந்த பணிகள் விரைவில் நிறைவடைந்து ரயில் சேவை தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!