ஏரி போல் காட்சியளிக்கும் செடியன் குளம்!!!!


தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதி பொதுமக்கள் குளித்து மகிழும் குளங்களில் ஒன்று செடியன் குளம். சுமார் 3 ஹெக்டர் 39 ஏர்ஸ் பரப்பளவில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இக்குளத்தில் தினமும் பெண்ககள், சிறுவர்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் குளித்து மகிழ்கின்றனர்.


கடந்த சில தினங்களாக இப்பகுதியில் பெய்த தொடர் மழையால் இக்குளத்தில் போதுமான அளவில் நீர் நிரம்பி ஏரிபோல் காட்சியளிக்கிறது.  குளத்தின் நீர் மட்டம் இன்னும் ஒரு சில அடிகள் உயர்ந்தால், நீர் நிரம்பி அருகில் உள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சி, பிலால் நகர் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடும் அபாயம் உள்ளதால், நிரம்பி வழியும் உபரி நீரை, குடியிருப்பு பகுதியில் புகாதவாறு, குளத்தின் இணைப்பில் உள்ள வடிகாலில் சீராகச் செல்லும் வகையில், வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கொள்ள வேண்டுமென  இப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், குளத்தின் கிழக்கு பகுதி கரையையொட்டி பொதுமக்கள், பள்ளி சிறுவர்கள், பள்ளி வாகனங்கள், மாட்டுவண்டிகள், ஆடு, மாடுகள் ஆகியன கடந்து செல்கின்றன. இப்பகுதியையொட்டி எவ்வித பாதுகாப்பு தடுப்பு இல்லாததால் குளத்தில் தவறி விழுந்து உயிரிழக்கும் அபாயம் உள்ளது. ஆதலால், இப்பகுதி கரையையொட்டி பாதுகாப்பு தடுப்பு அரண் அமைப்பதற்கான முயற்சியில் இப்பகுதி தன்னார்வலர்கள் ஈடுபட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.

தற்போது ஏரி போல் காட்சியளிக்கும் செடியன் குளத்தின் படங்கள் இதோ உங்களின் பார்வைக்கு...

 
 
 
 
 
 
 
 
 

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!