விரைவில் உயரப்போகிறது இந்தியாவில் இணைய சேவையின் குறைந்தபட்ச வேகம்!


புதுதில்லி: இந்தியாவில் இணையத்தின் குறைந்தபட்ச வேகம் தற்போதுள்ள 512 கேபிபிஎஸ் என்னும் அளவில் இருந்து 2 எம்பிபிஎஸ் அளவுக்கு விரைவில் உயரப் போவதாக தொலை தொடர்புத் துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக செய்தித்தாள் ஒன்றுக்கு தொலை தொடர்புத் துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் தொலை தொடர்புத் துறை நிறுவனங்கள் தங்களுடைய 3G மற்றும் 4G சேவை விளம்பரங்களில் குறிப்பிட்டுள்ள அளவுக்கு நெருக்கமாக கூட இணைய சேவையின் வேகம் இருப்பதில்லை. இந்நிலையில் நாம் விரைவில் 5G சேவைகளை அறிமுகப்படுத்தும் நிலையில் இருக்கிறோம். உண்மையில் நமது இணைய சேவையின் குறைந்தபட்ச வேகம் என்பது மிகவும் குறைவு. தேவைப்படும் அளவுக்கான சேவைகளை நம்மால் வழங்க முடிவதில்லை.

நாடு கொஞ்சம் கொஞ்சமாக டிஜிட்டல் பொருளாதார மயத்துக்கு மாறி வரும் சூழ்நிலையில் இந்தியாவின் இந்தியாவில் இணைய சேவையின் வேகத்தினை அதிகரிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். எனவே இந்தியாவில் இணையத்தின் குறைந்தபட்ச வேகம் தற்போதுள்ள 512 கேபிபிஎஸ் என்னும் அளவில் இருந்து 2 எம்பிபிஎஸ் அளவுக்கு விரைவில் உயர்த்தப்பட உள்ளது. இது குறைந்தபட்ச அடிப்படையாகும். இதனை விடக் கூடுதலாக கூட குறைந்தபட்ச அடிப்படை வேகம் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக இதனை விடக் குறையாது.

இவ்வாறு அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இணைய சேவையின் வேகம் குறைவாக இருப்பதற்கான பல்வேறு காரணிகள் குறித்தும், அதனை சரிபடுத்துவதில் இணைய சேவை வழங்கும் நிறுவனங்களின் பங்கு குறித்தும், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய்& சமீபத்தில் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!