தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, டிச.15 வரை கால நீட்டிப்பு!


தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வருகின்ற 15-12-2017 வரை விண்ணப்ப மனுக்கள் பெறப்படும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் இன்று (டிச.05) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது; 
இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளவாறு. 01-01-2018 அன்று தகுதி நாளாகக் கொண்டு கடந்த 03-10-2017 அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவரால் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் மீது சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2018 க்கான பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சிறப்பு திட்ட செயலாக்க பணிகள் 30-11-2017 லிருந்து 15-12-2017 தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

அதன்படி. வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் 15-12-2017 வரை அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் உரிய படிவங்களுடன், ஒவ்வொரு வீடாக சென்று குடும்ப வாரியாக வாக்காளர் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள உள்ளனர். வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் உள்ள, 01-01-2018 அன்று 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் இல்லம் தேடிவரும் அலுவலரிடம் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து உரிய ஆதார ஆவண நகல்களுடன் இணைத்து அந்த அலுவலரிடமே அளிக்கலாம்.  இதற்கென தேர்தல் ஆணையம் ஆண்டிராய்டு மொபைல் போன் மூலம் இயங்கக்கூடிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த செயலி மூலம் கணக்கெடுப்பு பணி நடைபெற்றுவருகிறது. இந்த செயலி மூலம் ஒவ்வொரு வீட்டின் முன்பு நின்று வாக்காளர் வசிக்கும் வீட்டின் புவி தகவமைப்பு (Longitude and Latitude) தகவல் சேகரிக்கப்படவுள்ளது.

தஞ்சாவூர் மாவட்ட பொது மக்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு 31-12-1999 வரை பிறந்தவர்கள் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் அனைவரும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட படிவம் 6 ஐ பெற்று, பூர்த்தி செய்து அதனுடன் வயதிற்கான ஆதார சான்று நகல் மற்றும் இருப்பிட முகவரிக்கான ஆதார நகல் ஆகியவற்றை வீடடிற்கு வருகிற வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம்  அளித்திடலாம் என அறிவிக்கப்படுகிறது.

பொது மக்கள் தங்கள் வீட்டிற்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கோரும் தகவல்களை சரியாக அளித்து அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இறுதி வாக்காளர் பட்டியல் 05-1-2018 அன்று வெளியிடப்படும்,  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!