செய்னா குளம்…


அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி பின் புறம் கீழத்தெருவில் அமைந்துள்ளது செய்னா குளம். சாக்கடை குளமாக இருந்த இந்த குளம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தூர்வாரப்பட்டு சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டது. இதற்காக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டாலும் 50 சதவீத வேலைகள் கிடப்பில் போடப்பட்டு சரி வர முடிக்கப்படாமல் இருந்து வந்ததாக அப்பகுதியினர் குற்றம்சாட்டினர். இந்த அலெட்சிய போக்கால் குளத்தை சுற்றிலும் கருவேலமரம் வளர்ந்து காடாக மாறியது.


இந்த நிலையில் 15 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் அப்துல் லத்தீபின் தொடர் முயற்சியாலும் கீழத்தெரு முஹல்லா வாசிகளின் தொடர் கோரிக்கைகளாலும் இன்று பேரூராட்சி ஊழியர்கள் இந்த கருவேல மரங்களை வெட்டி அகற்றினர். இது போல் வெட்ட வெட்ட கருவேல மரங்கள் தொடர்ந்து வளர்ந்துகொண்டு தான் வருகின்றன. இதற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த இதற்காக ஒதுக்கப்பட்ட 50 லட்சம் ரூபாயில் இதனை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.















Source: adiraipirai



0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!