டிசம்பர் 31க்குள் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயம்


டிசம்பர் 31ம் தேதிக்குள் தொடக்கக் கல்வியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் புகைப்பட அடையாள அட்டை கட்டாயம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறையின் தொடக்கக் கல்வி இயக்குநர் கார்மேகம் பிறப்பித்த உத்தரவில், 2017-18ம் கல்வியாண்டில் தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வி இயக்க கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் இதுவரை ஆதார் அட்டை எடுக்காத மாணவர்களுக்கு, ஒன்றிய அளவில் ஆதார் எடுப்பதற்கான பணிகளை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் விரைந்து முடிக்க வேண்டும். இப்பணிகள் டிசம்பர் 31க்குள் முடிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.


ஆதார் புகைப்பட அட்டை எடுக்கப்படாத மாணவர்களின் ஒட்டு மொத்த விவரங்களைப் பெற்று, ஆதார் எடுக்கும் முகமையினரிடம் செயல்திட்டத்தை வழங்கி ஆதார் எடுக்கும் நாள்களில் அம்மையத்தில் கல்வித் துறையைச் சார்ந்த பொறுப்பான நபர் ஒருவரை நியமித்து அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் புகைப்பட அட்டை எடுக்கும் பணியை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ஆதார் அட்டை எடுக்க மாணவர்களை ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு அழைத்துச் செல்லும் போது, பெற்றோர்களின் அனுமதியுடனும், பாதுகாப்பாகவும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

தற்போது ஆதார் புகைப்படம் எடுக்கும் மாணவர்களுக்கு ஆதார் எண் கிடைக்கப் பெற்றதும் அவ்விவரத்தையும் கல்வி மேலாண்மை தகவல் முறைமையில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!