துபாய் சஃபாரிக்கு இரண்டு வாரங்கள் இலவச அனுமதி!!


துபை இயற்கை சூழல் வனவுயிரின காட்சிக்கு 2 வாரம் இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


துபையில் அல் வாதி அருகே அல் அவீர் சாலையில் அல் வர்கா – 5 என்ற பகுதியில் சுமார் 119 ஹெக்டேர் பரப்பளவில் 1 பில்லியன் திர்ஹம் செலவில் உருவாக்கப்பட்டு 12.12.2017 அன்று வெள்ளோட்டமாக திறக்கப்பட்டுள்ள வன உயிரின இயற்கை சூழல் மிருகக்காட்சி சாலையை (Dubai Safari) (துபை சபாரி வில்லேஜ் என்ற மண்டலங்களை மட்டும்) 2 வாரங்களுக்கு இலவசமாக கண்டுகளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் 2018 ஜனவரி மாதத்தில் அதிகாரபூர்வமாக பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும், திறப்புவிழா தேதி இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும்.

இந்த மிருகக்காட்சி சாலை 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஆசியா, ஆப்பரிக்கா மற்றும் அரேபியா வில்லேஜ் எனப் பெயரிடப்பட்டுள்ள 3 மண்டலங்கள் தற்போது வெள்ளோட்டமாக திறக்கப்பட்டு இலவச அனுமதியளிக்கப்படுகிறது. துபை சபாரி பார்க் 4வது மண்டலமாக கருதப்படும்.

இந்த வனவுயிரின இயற்கைச் சூழல் மிருகக்காட்சி சாலையை காலை 9 மணிமுதல் இரவு 9 மணிவரை கண்டுகளிக்கலாம் என்றாலும் மிருகங்கள் இயற்கையாய் உலவும் பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் அனுமதியில்லை. மேலும் டிக்கெட் விற்பனையும் மாலை 4 மணியுடன் நிறுத்தப்படும்.

இதற்குமுன் ஜூமைராவில் சுமார் 50 வருடங்களாக செயல்பட்ட மிருகக்காட்சி சாலை மூடப்பட்டு அங்கிருந்த பறவை, மிருகங்கள் சுமார் 1,000 இங்கு மாற்றப்பட்டுள்ளதுடன் இதன் மொத்த எண்ணிக்கை சுமார் 2,500 என உயர்ந்துள்ளது. சுமார் 250 இனங்களைச் சேர்ந்த 500 மிருகங்களுடன் பறவைகள், ஊர்வன என காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனவரி முதல் கட்டண விபரங்கள்:

1. துபை சபாரி பார்க் நுழைவு கட்டணம்
குழந்தைகள் : 20 திர்ஹம்
பெரியவர்கள் : 50 திர்ஹம்

2. துபை சபாரி வில்லேஜ் நுழைவு கட்டணம்
குழந்தைகள் : 20 திர்ஹம்
பெரியவர்கள் : 50 திர்ஹம்

3. துபை சபாரி மற்றும் வில்லேஜ் என இரண்டும் சேர்த்து
குழந்தைகள் : 30 திர்ஹம்
பெரியவர்கள் : 85 திர்ஹம்

4. இலவச அனுமதி
குழந்தைகள் : 3 வயதுக்கு கீழ்
பெரியவர்கள் : 60 வயதுக்கு மேல் மற்றும் நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டவர்கள்

Source: Gulf News

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!