வாக்காளர் பட்டியலில் ஆண்டு முழுவதும் பெயர் சேர்க்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!


இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டவாறு கடந்த 10-01-2018 அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் மீது தொடர் பணியாக பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பான பணிகள் வருடம் முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு 01-01-2000 வரை பிறந்தவர்கள் அதாவது 01-01-2018 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் கடந்த ஆண்டு பெயர் சேர்க்க தவறியவர்கள் அனைவரும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மற்றும் தொடர்புடைய நகராட்சி அலுவலகங்களில் படிவம் 6 ஐ பெற்று, பூர்த்தி செய்து அதனுடன் வயதிற்கான ஆதார சான்று நகல் மற்றும் இருப்பிட முகவரிக்கான ஆதார நகல் ஆகியவற்றை இணைத்து படிவம் பெற்ற இடத்திலேயே பூர்த்தி செய்து அளித்திடலாம் அல்லது அருகாமையில் உள்ள அனைத்து  இ-சேவை மையம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

புதிதாக பெயர் சேர்க்க படிவம்  6 ஐயும் (வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் படிவம் 6A  மூலம்) பெயர் நீக்கம் செய்திட படிவம் 7-ஐயும், பெயர் திருத்தம், புகைப்பட மாற்றம் செய்ய படிவம் 8 ஐயும், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திட படிவம் 8A-ஐயும் பூர்த்தி செய்து உரிய சான்றாவண  நகல்களுடன், தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.  தஞ்சாவூர் மாவட்ட பொது மக்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்தினை சேர்ந்த வெளிநாட்டில் கடந்த 6 மாதங்களுக்கு மேல் வசித்து வரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்  படிவம் 6A  அளித்து தங்கள் பெயரினை  வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம். திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 18 வயது பூர்த்தி அடைந்த பெண்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் இந்த தொடர் திருத்த பணியின் போது தங்களது பெயரை சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, நீக்க, உரிய மாற்றங்கள் மேற்கொள்ள நேரடியாக உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அளிக்க இயலாதவர்கள், Online மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். 
Online மூலம் வீட்டில் இருந்தோ அல்லது இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: www.elections.tn.gov.in

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!