தஞ்சாவூரிலிருந்தது விமான சேவை !!!


சென்னை – தஞ்சை இடையே புதிய விமான வழித்தடத்தை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.


குறைந்த கட்டணத்தில் விமான பயணத்தை வழங்கும் உதான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சென்னை – தஞ்சை இடையே புதிய விமான வழித்தடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை – வேலூர் மற்றும் வேலூர் – பெங்களூரு வழித்தடத்திலும் விமான சேவைகள் உதான் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதே போன்று கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து முதன்முறையாக சென்னைக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது.

வடகிழக்கு மற்றும் வடஇந்தியாவில் உள்ள மலைப் பகுதிகளுக்கு இணைப்பை ஏற்படுத்தும் நோக்குடன் உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், அருணாச்சல பிரதேசம் , அசாம் , மணிப்பூர் மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் விமான ஓடுதளங்கள் மற்றும் ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

இந்த விமான சேவைகளில் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக பயண நேரம் கொண்ட வழித்தடத்தில் 2500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.
 

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!