அதிராம்பட்டினம் இஜ்திமா மாநாடு - முன்னேற்பாடு பணிகள் தீவிரம்


தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள மைதானப் பகுதிகளில், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட  இஸ்திமா மாநாடு நாளை (பிப்.09) வெள்ளிக்கிழமை மாலை அஸ்ர் தொழுகைக்கு பிறகு தொடங்கி சனிக்கிழமை (பிப்.10) இரவு இஷா தொழுகை வரை நடைபெற உள்ளது.


இந்த மாநாட்டில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு தொடர் சொற்பொழிவு ஆற்ற உள்ளனர். இதில், இறையச்சம், வாழ்வியல் நெறிமுறைகள், மறுமை வாழ்வு பற்றிய சிந்தனைகள், சிறப்பு பிரார்த்தனை ஆகியவை இடம்பெரும்.

இதில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 12 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாநாடு முன்னேற்பாடு பணிகள் குறித்த தகவல்:
1. அதிராம்பட்டினம் பெரிய ஜும்மா பள்ளிவாசல் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் சுமார் 8 ஆயிரம் பேர் வரை அமர்வதற்கான இடவசதி அமைந்துள்ளது. இடப் பற்றாக்குறையை போக்க, அதன் அருகே உள்ள மைதானத்தில் அமர்வதற்கு பிரமாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பெரிய ஜும்மா பள்ளிவாசல் எதிரே உள்ள கீழத்தெரு பிரதான சாலையில் சுமார் 200 மீட்டர் நீளத்தில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இப்பகுதியில் முமுநேர தூய்மை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

2. பெரிய ஜும்மா பள்ளிவாசல் மைதானத்தில் 4 இடங்களில் உணவகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக இரவு, காலை, பகல் ஆகிய 3 வேளைகளுக்கான உணவு டோக்கன் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஒரு டோக்கன் ரூ.100

3. மாநாட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பாட்டல் குடிநீர், டேங்கர் லாரிகள் நிறுத்தி வைக்கப்படுகிறது.

4. ஒளு செய்வதற்கு, கழிவறை, சிறுநீர் கழிக்க பெரிய ஜும்மா பள்ளிவாசல் மற்றும் மைதானப் பகுதிகளில் தனித்தனியாக 3 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

5. மருத்துவ முதலுதவிக்காக மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் மாநாட்டில் சேவையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

6. மாநாட்டில் ஆம்புலன்ஸ் வசதி, தீ அணைப்பு வாகனம் உள்ளிட்டவை இடபெறும்.

7. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வானங்கள் நிறுத்தவதற்கு பெரிய ஜும்மா பள்ளிவாசல் பின்புறம் அமைந்துள்ள மைதானம் மற்றும் புளியமரக் கொல்லை ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

8. மாநாட்டில் போக்குவரத்தை சீர் செய்ய, மாநாடு இடம் வழிகாட்டுதல், வருகையாளர்களுக்கு சேவையாற்ற போன்ற பணிகளுக்காக சுமார் 100 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் களப்பணியில் ஈடுபட உள்ளனர்.

9. மாநாட்டில் இஸ்லாமிய மார்க்க புத்தகங்கள், தொப்பி, அத்தர், பழங்கள், குளிர் பானங்கள், தின்பண்டங்கள் ஆகியவை விற்பனைக்காக  தனி ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

10. இஸ்திமா மாநாடு அழைப்பு பணிக்காக துண்டு பிரசுரங்கள், ஆட்டோ விளம்பரங்கள், பிளக்ஸ் பேனர்கள், வால் போஸ்டர், தொலைக்காட்சி, பத்திரிகைகள் விளம்பரங்கள் போன்றவை இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.


 


0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!