அமீரகத்திற்கு புதிதாக வேலைவாய்ப்பு விசாவில் செல்வோரின் கனிவான கவனத்திற்கு!


அமீரகத்தில் புதிய வேலைவாய்ப்பு விசாக்களை பெற கட்டாயம் அந்தந்த நாட்டு அரசுகளால் வழங்கப்படும் "நற்சான்றிதழ் பத்திரம்" அவசியம் என அறிவித்திருந்தது ஆனால் இதற்கான எந்தவிதமான முறையான கட்டமைப்புகளும் இந்திய மத்திய அரசிடம் இல்லாததால் அமீரகத்திற்கு புதிய வேலைவாய்ப்புகளை தேடிச்செல்வோர் சிரமத்தை சந்தித்து வந்தனர்.


இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதத்தில் இந்தியாவிலேயே முதன்முதலாக கேரள மாநில அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, மாவட்ட தலைநகரங்களில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள் ₹ 1,000 கட்டணத்தில் தடையில்லா சான்றிதழை வழங்கும் என தெரிவித்துள்ளதுடன் இதுகுறித்த கேரள அரசு மற்றும் போலீஸ் தலைமையகத்தின் கடிதங்களையும் திருவனந்தபுரத்தில் செயல்படும் அமீரக துணைத் தூதரகத்திலும் வழங்கிவிட்டது.

கேரள அரசு மற்றும் போலீஸ் துறையின் கடிதங்களை ஏற்றுக் கொண்டுள்ள அமீரக துணைத் தூதரகம் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகம் வழங்கும் தடையில்லா சான்றிதழையே அமீரக வேலைவாய்ப்பிற்கான நற்சான்றிதழாக அங்கீகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடக, தெலுங்கானா மற்றும் ஆந்திர ஆகிய 5 மாநிலங்களுக்கும் கேரளத்தில் செயல்படும் அமீரக துணைத் தூதரகம் மூலமே விசா நடைமுறைகளை மேற்கொள்ள முடியுமென்பதால் இதேபோன்றதொரு உத்தரவுகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் விரைவில் வழங்கலாம் என எதிர்பார்ப்பதாக திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக துணைத் தூதர் தெரிவித்துள்ளார்.

தடையில்லா சான்றிதழ் குறித்து விளக்கமளித்துள்ள கேரளா போலீஸ், விண்ணப்பதாரர்கள் ₹ 1,000 கட்டணத்துடன் பாஸ்போர்ட் காப்பி போன்ற தேவையான ஆவனங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் மீது எந்த குற்றப்பின்னனியும் இல்லாத நிலையில் தடையில்லா சான்றிதழ் சில தினங்களில் வழங்கப்படும், குற்றப்பின்னனி ஏதுமிருந்ததால் கிரைம் பிரேஞ்சு போலீஸ் மூலம் விசாரிக்கப்பட்டு சான்றிதழை வழங்குவதற்கு மேலும் சில தினங்கள் கூடுதலாக எடுத்துக் கொள்ளப்படும் என விளக்கமளித்துள்ளது.

Source: Gulf News

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!