அமீரக வேலைவாய்ப்பு விசா பெற நற்சான்றிதழ் கட்டாயமில்லை!




அமீரக வேலைவாய்ப்பு விசா பெறுவதற்கு நன்னடத்தை நற்சான்றிதழ் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும் என்ற சட்டம் கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் அமுலுக்கு வந்ததை தொடர்ந்து புதிதாக அமீரகத்திற்கு வேலை தேடி வருவோர் கடும் நெருக்கடியை சந்தித்து வந்தனர். இந்தியாவில் இதுபோன்ற நன்னடத்தை நற்சான்றிதழ் வழங்கும் மையப்படுத்தப்பட்ட அமைப்பு எதுமில்லாத நிலையில் கேரளா போன்ற மாநிலங்களில் அரசுகள் தங்களின் சுயமுயற்சியின் கீழ் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகங்கள் வழங்கும் தடையில்லா போலீஸ் சான்றிதழையே மாற்று நன்னடத்தை சான்றிதழாக அமீரக தூதரங்களை ஏற்கச் செய்தனர்.

அமீரகத்தை பொறுத்தவரை இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் விசிட் விசாவில் வந்து வேலை தேடும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இவ்வாறாக விசிட் விசா, சுற்றுலா விசா, ஏற்கனவே ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில் புதிய நிறுவனத்தில் புதிய விசாவின் கீழ் வேலையில் சேர விரும்புவோர் அதாவது அமீரகத்திற்குள்ளேயே இருப்பவர்களுக்கு இனி நன்னடத்தை நற்சான்றிதழ் தேவையில்லை என அறிவித்துள்ளது அமீரக குடியேற்றத்துறை. இந்த அறிவிப்பு மிகவும் வரவேற்கப்படும் ஒன்றாகும்.

அதேவேளை இந்தியா மற்றும் ஏனைய வெளிநாடுகளில் இருந்து கொண்டு வேலைவாய்ப்பு விசாவிற்கு விண்ணப்பிப்போர் கட்டாயம் நற்சான்றிதழ் இணைக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. இந்த கட்டாய சட்டத்திலிருந்து இந்தோனேசிய மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் இருந்து வரும் வீட்டுப்பணியாளர் தொடர்புடைய விசாக்களுக்கு மட்டும் எதிர்வரும் ஜூன் மாதம் வரை விலக்களிக்கப்பட்டுள்ளது மற்ற அனைத்து வகை வேலைவாய்ப்பு விசாக்களுக்கும் சான்றிதழ் கட்டாயமே

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!