அமீரகத்தில் லூலூ ஹைப்பர் மார்க்கெட் பெயரில் உலா வரும் பரிசு மோசடி!


அமீரகத்தில் அவ்வப்போது பலவகையான பரிசுத் திட்டங்கள், விமானப் பயணம் போன்ற சலுகைகள் என பல போலியான விளம்பரங்கள் குறுஞ்செய்திகள், சமூக வலைத்தளங்களின் வழியாக மின்னல் வேகத்தில் பரப்பப்படும் ஆனால் இறுதியில் அவை ஏமாற்றுத் திட்டம் என தெரியவரும்.


அப்படி ஒரு ஏமாற்றுத் திட்டம் அமீரகத்தில் புகழ்பெற்ற லூலூ ஹைப்பர் மார்க்கெட் குழுமத்தின் பெயரால் தற்போது பரப்பப்படுகிறது. 2 லட்சம் திர்ஹங்கள் வரை இலவச பரிசுத்திட்ட கிப்ட் வவுச்சர்கள் வழங்கப்படுவதாக கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.

இந்த விளம்பரம் ஒரு மோசடி என்றும் உண்மையான தகவல்களை அறிந்து கொள்ள எப்போதும் தங்கள் நிறுவனத்தின் இணைய தளங்களையே பார்வையிடுமாறும் லூலூ நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மிக சமீபத்தில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் இலவச விமான டிக்கெட் வழங்குவதாகவும், அமீரக இமிக்கிரேசன் அதிகாரிகள் அழைப்பது போல் அமீரக இமிக்கிரேசன் நம்பப் போன்றே தோற்றமளிக்கும் போன் நம்பர்களை உபயோகித்து மிரட்டி பணம் பறித்த ஒரு கும்பல் குறித்து செய்திகள் வெளியாகின.

பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட சுமார் 40 பேர் சில மாதங்களுக்கு முன் கைதும் செய்யப்பட்டார்கள்.

Source: Gulf News

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!