பச்சை மிளகாயின் 10 முக்கியமான மருத்துவ குணங்கள் ..!



நம் உணவை காரசாரமாக மாற்றுவதற்காக பச்சை மிளகாய் சேர்க்கப்படுகிறது என்றாலும்,  அதில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். பச்சை மிளகாயில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா என்று நாம் ஆச்சரியப்படும் அளவிற்கு இதனுடைய மருத்துவத்தன்மை இருக்கிறது. 
1. சளி மற்றும் சைனஸ்-லிருந்து நம்மை காக்கிறது
பச்சை மிளகாயில் காணப்படும் எரிச்சலூட்டும் பொருளான கேப்சைசின் (Capsaicin) மூக்கின் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால்,  சளி மற்றும் சைனஸ் பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது.
2. வலியை கட்டுப்படுத்துகிறது
பச்சை மிளகாய் உடலில் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மையுடையது என்பதால், வலி நிவாரணியாக செயல்படுகிறது.
3. வைட்டமின்-சி அதிக அளவில் கொண்டது
பச்சை மிளகாயில் வைட்டமின் - சி சத்து அதிக அளவில் இருக்கிறது. இச்சத்து இணைப்பு திசுக்கள், ரத்த குழாய் மற்றும் தோலுக்கு மிக நல்லது. பச்சை மிளகாயை குளிர்ந்த இடத்தில் மட்டுமே வைக்கவேண்டும். சூடான இடங்களில் வைக்கும்பொழுது, அதனுள் இருக்கும் சத்து குறைந்துவிடும்.
4. மனநிலையை ஒழுங்குபடுத்தும்
எண்டார்பின்ஸ் (endorphins) என்ற ரசாயனப்பொருளை வெளியிடுவதன் மூலம், மனநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் நொதிகளை (enzymes) கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், உடல் வலியையும் கட்டுப்படுத்துகிறது.
5. சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதால், சர்க்கரை நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டிய உணவுப்பொருளாக பச்சை மிளகாய் இருக்கிறது.
6. இரும்புச்சத்து மிகுதியாக உள்ளது
இரும்புச்சத்து குறைவாக இருப்பவர்கள், பச்சை மிளகாய் உட்கொள்வதன் மூலம் இரும்புச்சத்து குறைபாட்டினை கட்டுப்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல், கண் பார்வைக்கு மிகவும் நல்லது.
7. தோல் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு
பாக்டீரியாவிற்கு எதிரான பண்புகள் அதிக அளவில் இருப்பதால், தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சரியான தீர்வாக பச்சை மிளகாய் இருக்கிறது.
8. ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும்
வைட்டமின் - கே சத்து அதிக அளவில் இருப்பதால், காயத்தினால் ஏற்படும் ரத்தப்போக்கை பச்சை மிளகாய் உட்கொள்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
9. இதய செயல்பாட்டை கட்டுப்படுத்துகிறது
பீட்டா-கரோட்டின் என்ற ஆன்டி ஆக்ஸிடண்ட் பச்சை மிளகாயில் அதிக அளவு இருப்பதால், நமது உடலின் இதய செயல்பாட்டினை கட்டுப்படுத்துகிறது.
10. அதிக அளவு வைட்டமின் - ஏ சத்து
பச்சை மிளகாயில், வைட்டமின் - ஏ சத்து அதிக அளவில் இருப்பதால், பற்கள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்துகிறது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!