கிழக்கு கடற்கரைச் சாலையில் ஆபரேஷன் 'சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை!

தமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் ஆபரேஷன் ‘சாகர் கவாச்’ என்னும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி, நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணிவரை நடைபெறுகிறது.


அதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தம்பிக்கோட்டை கிழக்கு கடற்கரைச் சாலையில், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் அறிவுறுத்தலின் பேரில், பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் தலைமையில், அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் தியாகராஜன், உதவி ஆய்வாளர் (தனிப்பிரிவு) அய்யாதுரை மற்றும் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த ஒத்திகை நிகழ்ச்சி வாயிலாக கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுப்பது எப்படி, அதற்கான ஆயத்த நிலையில் கடலோர காவல்படை மற்றும் கடற்படை, தமிழ்நாடு காவல் படையினர் இருக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!