காரைக்குடி – திருவாரூர் இடையே 147 கி.மீ. தொலைவுக்கு ரூ. 711 கோடி செலவில் அகல ரயில் பாதை அமைத்தல் மற்றும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம், அதிரை ரயில் நிலையத்தில் கட்டுமானப்பணிகள் கடந்த 3.7.2017 -ல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சுமார் ரூ. 3.5 கோடி மதிப்பீட்டில், 65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலையம், 420 மீட்டர் நீளத்தில் நடைமேடை மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம், கழிப்பறை கட்டடம், டிக்கெட் கவுண்டர், பயணிகள் ஓய்வறை என அனைத்து வசதிகள் கொண்ட புதிய ரயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தில் 50 டன் இரும்பைக் கொண்டு மேற்கூரை அமைக்கும் பணிகள் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதே போல், 65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலைய மேற்கூரை, 1 மற்றும் 2-வது நடைமேடைகளை இணைக்கும் படிக்கட்டு நடைமேடைக்கான மேற்கூரை, 2-வது பிளாட் பாரத்தில் தலா 32 மீட்டர் நீளத்தில் 4 மேற்கூரைகள், முதல் பிளாட் பாரத்தில் தலா 32 மீட்டர் நீளத்தில் 3 மேற்கூரைகள் அமைக்கப்படுகின்றன.
இது ஒரு புறம் இருக்க, அதிரை பிலால் நகர் ECR சாலையை கடந்து செல்லும் ரயில் தண்டவாளத்தில் கற்கள் கொட்டி பரத்தும் பணியும், தண்டவாள இடைக்கற்கள் பொருத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது ரயில் நிலையத்தில் இடைக்கற்களின் மீது தண்டவாள கம்பிகளை இணைக்கும் பணி தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே ரயில் பயணிகளுக்கான நிழற்கூரை அமைப்பதற்கான கம்பிகள் வந்திறங்கியுள்ளன. இதனை தொழிலாளர்கள் வெல்ட் செய்து வருகின்றனர். விரைவில் இதனை கட்டமைக்கும் பணிகள் தொடங்க உள்ளன.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!