அதிரையில் மஸ்ஜித் ஆயிஷா (ரலி) புதிய பள்ளிவாசல் திறப்பு விழா


தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் செட்டித்தெருவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள மஸ்ஜித் ஆயிஷா (ரலி) பள்ளிவாசல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.


விழாவில், ஹாஜி எம்.ஏ முகமது முகைதீன் தலைமை வகித்து, 1500 சதுர அடியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பள்ளிவாசலை, அதிராம்பட்டினம் பகுதி இஸ்லாமியர்களின் தொழுகைக்கு பயன்படுத்திக்கொள்ள வக்ஃபு செய்தார்.

அதிராம்பட்டினம் அல் மதரஸத்துஸ் ஸலாஹியா அரபிக்கல்லூரி முதல்வர் மவ்லவி ஏ.எஸ் அகமது இப்ராஹீம், கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி. சபியுல்லா அன்வாரி, காதிர் முகைதீன் கல்லூரி அரபிக் பேராசிரியர் மவ்லவி. முகமது இத்ரீஸ் ஆகியோர் விழா பேரூரை நிகழ்த்தினர். பின்னர், பள்ளிவாசலில் மஹ்ரிப் நேர தொழுகை நடத்தப்பட்டது. தொழுகையில், அதிராம்பட்டினம் பகுதி இஸ்லாமியர்கள் பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாட்டினை, ஹாஜி ஏ.அப்துல் ரெஜாக் செய்தார்.

பள்ளிவாசல் சிறப்பு அம்சங்கள்:
1. அதிராம்பட்டினத்தை அலங்கரிக்கும் இறை இல்லங்கள் வரிசையில் 36-வது இடத்தைப் பெற்றுள்ளது இப்பள்ளி.

2. 1500 சதுர அடியில் 3 தளங்கள்.  குளிரூட்டப்பட்ட தொழுகைக்கூடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஒதுக்கூடம், நவீன கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமைந்துள்ளது.

2. தரை தளம் மற்றும் முதல் தளம் தொழுகைக்கும், 2-வது தளம் மக்தப் வகுப்பு நடத்துவதற்கும் பயன்படுத்தப்பட உள்ளது.

3.  சேர்மன் வாடி பஸ் நிறுத்தம், அதிரை அரசு மருத்துவமனை ஆகிய இடங்களிலிருந்து மிக அருகாமையில் அமைந்துள்ளது.

4. இப்பள்ளியில், தொழுகை, தாலிம், திக்ர், குர் ஆன் ஓதுதல், தீன் பேச்சு, தாவத் பேச்சு போன்ற நற்செயல்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!