பட்டுக்கோட்டை - காரைக்குடி தடத்தில் ரயில் சேவையை தொடங்க இரயில் பயனாளிகள் சங்கம் கோரிக்கை மனு!


அகல ரயில் பாதை பணிகள் முடிந்து வெள்ளோட்டம் விடப்பட்ட காரைக்குடி- பட்டுக்கோட்டை இடையே ரயில் சேவையை தொடங்க வேண்டும் என, பேராவூரணி வட்ட இரயில் பயனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


இதுகுறித்து இச்சங்கத்தின் அமைப்பாளர் கே.வி.கிருஷ்ணன், தலைவர் ஏ.மெய்ஞானமூர்த்தி, செயலாளர் ஏ.கே.பழனிவேல், பொருளாளர் சி.கணேசன் ஆகியோர் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவினை தென்னக ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது;-
"காரைக்குடி-திருவாரூர் அகல ரயில்பாதை பணிகளுக்காக இப்பகுதியில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காரைக்குடி- பட்டுக்கோட்டை இடையேயான வழித்தடத்தில் பணிகள் முடிந்து 3 மாதங்கள் ஆகிவிட்டது. இத்தடத்தில் வெள்ளோட்டமும் விடப்பட்டது. கட்டணத்துடன் ஒரு நாள் பயணிகள் சேவை தொடங்கப்பட்டது.
ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து  ரயில் இயக்கப்படும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது அதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை.



0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!