அசுர வேகம்... ஆபத்தானது தானே!
அதிரை நியூஸ்: ஜூன் 13
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நாளுக்கு நாள் அதிக எண்ணிக்கையிலான இருசக்கர வாகனங்கள் அதிகரித்து வருவது ஒருபுறமிருந்தாலும், மறுபுறம் அதிக எண்ணிகையிலான விபத்துகள் நிகழ்வது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சில நிமிட தூரம் நடந்து செல்வதைக்கூட அருவெறுப்பாக நினைக்கும் இன்றைய இளைஞர்கள் விலை உயர்ந்த நவீன பைக்கில் அதிவேகமாக ஓட்டிச் செல்வதை அதிகமானோர் விரும்புகின்றனர்.
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நாளுக்கு நாள் அதிக எண்ணிக்கையிலான இருசக்கர வாகனங்கள் அதிகரித்து வருவது ஒருபுறமிருந்தாலும், மறுபுறம் அதிக எண்ணிகையிலான விபத்துகள் நிகழ்வது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சில நிமிட தூரம் நடந்து செல்வதைக்கூட அருவெறுப்பாக நினைக்கும் இன்றைய இளைஞர்கள் விலை உயர்ந்த நவீன பைக்கில் அதிவேகமாக ஓட்டிச் செல்வதை அதிகமானோர் விரும்புகின்றனர்.
பண்டிகை காலங்கள் மற்றும் இன்ன பிற விசேஷ தினங்களின் போது, இருசக்கர வாகனங்களை அசுர வேகத்தில் ஓட்டிச்செல்லும் போது நிகழும் விபரிதங்கள் பெரும் கவலை அளிப்பதாகவும், சமூகத்திற்கு பெரும் சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் உள்ளது. வாகன விபத்தில் ஏற்படும் உயிரிழப்பு, படுகாயங்களால் உடல் ஊனம், அதன் மூலம் குடும்பத்தாருக்கு ஏற்படும் பொருளாதார இழப்பீடு, மன உளைச்சல், வாகன சேதம், போலீஸ் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கை போன்ற வாழ்நாள் பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 2016 ஆம் ஆண்டு 2,706 சாலை விபத்துகளில் 413 பேர் உயிரிழந்தாகவும். இதில், இரு சக்கர வாகனங்களால் 1,867 விபத்துகளும், மூன்று சக்கர வாகனங்களால் 63 விபத்துகளும், கார் மற்றும் வேன்போன்ற நான்கு சக்கர வாகனங்களால் 166 விபத்துகளும், மினி லாரி போன்ற வாகனங்களால் 166 விபத்துகளும், கனரக லாரி போன்ற வாகனங்களால் 206 விபத்துகளும், பேருந்துகளால் 265 விபத்துகளும், டிராக்டரால் 6 விபத்துகளும் நிகழ்ந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், விபத்தை தடுக்க கடந்த 2017 ஆம் ஆண்டு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, சாலை போக்குவரத்து விதிகளை மீறியது தொடர்பாக 2,35,761 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், குடி போதையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது 5341 வழக்குகளும், தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்கள் மீது 84207 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து தொடர்பாக பொதுமக்களிடம் தக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, 4503 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் காவல்துறையினரால் நடத்தப்பட்டது.
விபத்து ஏற்படவும், சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படக் காரணியாகவும் கீழ்கண்டவை அமைகின்றன...
1. அதிவேகமாக வாகனம் ஓட்டுவது,
2. போட்டி போட்டுக்கொண்டு பிற வாகனங்களை முந்திச்செல்ல முற்படுவது
3. திடீரென பிரேக் போடுவது
4. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனத்தின் சைடு ஸ்டாண்டை சாலையின் தரையில் உரசவிட்டு தீப்பொறியை வரவழைப்பது.
5. பிறருக்கு எரிச்சல் ஏற்படும் வகையில் அதிக ஒலி எழுப்புவது
6. கண் கூசுகின்ற அளவுக்கு முகப்பு விளக்குகளை எறியவிடுவது
7. வாகனத்தில் அதிகமானோரை ஏற்றிச் செல்வது
8. செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுவது,
9. குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது,
10. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது
அதிவேகமாக வாகனத்தை இயக்குவதுதான் சாலை விபத்துக்கு முக்கிய காரணம் என்பதை இளைஞர்கள் அறிய வேண்டும். எனவே, அதிவேகமாகவோ, குடிபோதையிலோ வாகனத்தை ஓட்ட வேண்டாம். தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும்.
அதிவேகமாக வாகனத்தை இயக்குவதுதான் சாலை விபத்துக்கு முக்கிய காரணம் என்பதை இளைஞர்கள் அறிய வேண்டும். எனவே, அதிவேகமாகவோ, குடிபோதையிலோ வாகனத்தை ஓட்ட வேண்டாம். தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும்.
பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை:
1. சிறுவர்களுக்கு விலை உயர்ந்த நவீன இருசக்கர வாகனங்களை வாங்கி கொடுப்பது ஆபத்தில் கொண்டு செல்லும்.
2. வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், 18 வயதுக்கு உட்பட்டோர் வாகனங்கள் ஓட்டிச்செல்வதும் சட்டப்படி குற்றம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
3. இரவு நேரங்களில் தகுந்த காரணமின்றி பிள்ளைகளை வெளியில் செல்ல அனுமதிப்பதை தவிர்க்கவும்.
4. அளவுக்கு அதிகமாக பாக்கெட் மணி, விலை உயர்ந்த செல்போன் போன்றவற்றை பிள்ளைகளுக்கு வழங்குவதை கூடுமானவரை தவிர்க்கவும்.
5. மீறுவோர் மீது உலமாக்கள் மற்றும் அந்தந்த பகுதி (மஹல்லா) ஜமாஅத் நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் மூலமாக எச்சரித்து, அறிவுரை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவற்றை மீறுவோர் மீது, காவல்துறை மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கலாம்.
6. சமூகம் போற்றும் நல்ல ஒழுக்கமுள்ள பிள்ளைகளாக வளர்ப்பதில் அதிக அக்கறை பெற்றோரு
க்கு உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அதிகச்செல்லம்; ஆபத்தில்தானே முடியும்!
அதிகச்செல்லம்; ஆபத்தில்தானே முடியும்!
நன்றி.
சேக்கனா நிஜாம் (எம். நிஜாமுதீன்
சேக்கனா நிஜாம் (எம். நிஜாமுதீன்
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!