அன்பார்ந்த அதிரை கீழத்தெரு முஹல்லா அமீரக உறுப்பினர்கள் அனைவர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..........
வரும்
15/02/2019 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் நிர்வாக தேர்விற்கு நம் அமீரக
உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அன்போடு
அழைகின்றோம்.
மற்ற மற்ற
கூட்டங்களுக்கு உங்களில் சிலபேர் வேளைப்பளுவின் காரணமாக வர இயலாத சூழல்
இருந்தாலும் இந்த நிர்வாக தேர்வில் நீங்கள் ஒவ்வருவரும் கண்டிப்பாக கலந்து
கொண்டு ஒரு நல்ல தலைமையை, ஒரு சிறந்த நிர்வாகத்தை தேர்ந்தெடுக்க கடமை
பட்டுள்ளீர்கள் என்பதை அறிவீர்கள்.
ஆதலால்
எந்த ஒரு மனக்கசப்பும் இல்லாமல், ஒற்றுமையை நிலைநாட்ட, எந்த ஒரு
உறுப்பினரும் விடுபடாத வண்ணம் எல்லோரும் இந்த நிர்வாக தேர்வில் கலந்து
கொள்ளுமாறு உங்களையெல்லாம் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.
*ஏன் இந்த அமைப்பு தொடரவேண்டும்*
நம்மில் சில உறுப்பினர்களுக்கு ஏன் மறு கூட்டம், சண்டைகள் வரும், பிரச்சனைகள் ஏற்ப்படும் என்றல்லாம் என்னத்தோன்றும், சொல்லக்கூடும்.
முதலில்
நம் உறுப்பினர்கள் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும், பிரச்சினை
என்பது எல்லா முஹல்லாவிலும் எல்லா மட்டங்களிலும் இருக்கத்தான் செய்யும்,
எந்த பிரச்சினை நடந்தாலும் அதை தன் அசாத்திய திறமையால் சரியான பாதையில்
கொண்டு செல்கின்ற புதிய தலைமையை தேர்ந்தெடுக்கின்ற பொறுப்பு உங்கள்
ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.
இந்த
அமைப்பு சந்தா வசூல் செய்து முஹல்லாவிற்க்கு நல்லது செய்ய
முடியாவிட்டாலும், மாதாமாதம் கூட்டம் நடத்த முடியாவிட்டாலும், பேரிடர்
காலங்களில் நிகழும் பேரிழப்பை சரி செய்ய, நளிவுற்றவர்கள் மருத்துவ உதவியை
நாடும்போது, கலவர நேரங்களில் ஒன்று கூடி ஒரு முடிவெடுக்க ஒரு நல்ல தலைமை
வேண்டும் என்பதை நீங்கள் எல்லோரும் உணர்வீர்கள்.
ஆகையால்
அதிரை கீழத்தெரு முஹல்லாவில் உள்ள அமீரக உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய
சொந்த வேலைகளையெல்லாம் முன் கூட்டியே சரிசெய்து வைத்துவிட்டு விருப்பு
வெறுப்பின்றி, மனக்கசப்பை தூக்கி எரிந்து விட்டு 15/02/2019 அன்று
நடக்கவிருக்கும் இந்த நிர்வாக தேர்வில் கலந்து கொண்டு ஒரு சிறந்த
நிர்வாகத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று நம் அமீரக உறுப்பினர்கள்
அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
*தலைமைத்துவ பண்புகள்*
1. பதவியை கேட்டுப்பெற கூடாது.
*புகாரி 2261*
2. பதவி என்பது தனக்கு வழங்கப்பட்ட ஒரு பொறுப்பு, பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படும்.
*புகாரி 2409*
3. பொறுப்பு தமக்கு நன்மையை தரவில்லை என்றாலும் தீமையை தந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தோடு நிர்வாகம் செயல்படவேண்டும்
*புகாரி 1392*
4. மக்கள் அனைவராலும் விரும்பப்படக்கூடிய நபராக இருத்தல்.
*புகாரி 3730*
5. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தம் மகள் திருடினாலும் கைகளை வெட்டுவேன் என்று சொன்னதை போன்று நீதிக்கு சாட்சியாக வேண்டும்
*புகாரி 3475*
6. மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்று தகுதியற்றவருக்கு பொறுப்பு வழங்குதல், அதில் கவனத்தோடு இருக்க வேண்டும்
*புகாரி 6496*
7.
பதவி ஒரு கையடைப் பொருளாகும். அதை முறைப்படி அடைந்து, அதில் தமக்குரிய
பொறுப்புகளை நிறைவேற்றியவரைத் தவிர மற்றவர்களுக்கு அது (மறுமையில்) இழிவும்
துயரமும் ஆகும்
*முஸ்லிம் 3729*
*தலைமைக்கு கட்டுப்படுதல்*
1. தலைவராக நியமிக்கப்படுபவர் யாராக இருந்தாலும் அவருக்கு கட்டுப்படவேண்டும் (கருப்பர் இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரியே).
*புகாரி 693*
2. அல்லாஹ்விற்கு மாறு செய்யும்படி கட்டளையிடாதவரை தலைவருக்கு கட்டுப்பட வேண்டும்.
*புகாரி 7144*
இவற்றை
போன்று சிறந்த தலைமை அமைந்து அவற்றை பின்பற்றி வாழும் நன்மக்களாக
உங்களையும் என்னையும் ஆக்கி எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக !!!
என்றும் அன்புடன்,
LMI முகம்மது அப்பாஸ்
தலைவர்
அதிரை கீழத்தெரு முஹல்லா (AEM)
அமீரகம்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!