தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நடைபெற்றதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை இன்று ( 01.03.2019 ) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை தெரிவித்ததாவது;
2019 ஆம் ஆண்டுக்கான பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு 01.03.2019 தொடங்கி 19.03.2019 வரை நடைபெறுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 105 தேர்வு மையங்களில் 13 ஆயிரத்து 130 மாணவர்களும், 16 ஆயிரத்து 426 மாணவியர்களும் என மொத்தம் 29 ஆயிரத்து 556 பள்ளி மாணவ , மாணவியர்களும், தனித் தேர்வர்களுக்கு 2 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 474 தனித்தேர்வர்களும் ஆக கூடுதல் 30 ஆயிரத்து 030 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
இம்மாவட்டத்தில் 78 மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இம்மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக தரை தளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், காது கேளாத வாய் பேச இயலாதார்,டிஸ்லெக்சியா மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கியும், சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்தும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகளை சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்தியும், தேர்வு மைய வழித்தடங்களில் மாணவர்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.
இம்மாவட்டத்தில் 7 இடங்களில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, 17 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய காவலர்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இத்தேர்வு நடைபெறும் அனைத்து தேர்வு மையங்களில் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் என 2 ஆயிரத்து 668 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு பணி மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளிக் கல்வித் துறையில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு 224 பறக்கும்படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு, தேர்வு மையங்களில் மாணாக்கர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்கவும் உத்தரவிட்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் கல்வித்துறை அலுவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆய்வு அலுவலர், ஊர்காவல் படைத்தலைவர் மற்றும் பிறத்துறை அலுவலர்களை கொண்டு மாவட்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டு தேர்வு மையங்கள் திடீர் ஆய்வு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் தேர்வு பணிகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்க தமிழக அரசால் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணை இயக்குநர் - II) கே. செல்வகுமார் அவர்களை மேற்பார்வை அலுவலராக நியமனம் செய்து தேர்வு பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
2018-2019 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் முழுBதர்ச்சி பெற வேண்டும் எனவும், அதிக மதிப்பெண்களை பெற வேண்டும் எனவும் மாணவ செல்வங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் பெ. சாந்தா மற்றும் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!