
haja

அதிரை கீழத்தெருவில் வசித்து வரும் முஹம்மது நூஹு அவர்களின் மகன் ஹாஜா [ வயது 20 ] , அதிரை பிலால் நகர் பகுதியைச் சேர்ந்தவர் காதர் முஹைதீன் [ வயது 23 ]
நேற்று [ 23-11-2012 ] மாலை சுமார் 5.45 மணியளவில் காட்டுப்பள்ளி தர்ஹா அருகே தனியாக நின்றுகொண்டு இருந்த ஹாஜாவை முதுகுக்கு பின்னால் சென்ற காதர் முஹைதீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதைத் தொடர்ந்த அதிரை த.மு.மு.க வினருக்கு சொந்தமான ஆம்புலன்சில் உடல் எடுத்துச் செல்லப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதியளிக்கப்பட்டது. உடலில் பல்வேறு இடங்களில் பலமாக காயம் ஏற்பட்டதால் மருத்துவர்களின் சிகிச்சைகள் பலனின்றி இன்று [ 24-11-2012 ] அதிகாலை சுமார் 4.45 மணியளவில் உயிர் பிரிந்தன [ இன்னா லில்லாஹி...] பிரத பரிசோதனையடுத்து உடல் இன்று உறவினரிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.
கத்தியால் குத்திய காதர் முஹைதீன் காவல்துறையில் சரண் அடைந்ததை தொடர்ந்து வழக்கு அவர் மீது போடப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு எற்பட்ட விரோதத்தின் காரணமாகவே கத்திகுத்து நடைபெற்றது என்ற பேச்சு பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது. இச்சம்பவம் தெருவின் முக்கிய பகுதியில் நடைபெற்றதால் அப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்படுகின்றன.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
13 comments:
நான் மனதுக்குள்ளே பாசம் வைத்திருந்த என் தங்க மருமகன் ஹாஜா எங்களை விட்டுப்போய் விட்டான் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) எங்களுக்கு இது தாங்க முடியாத இழப்பு .இந்த இழப்பை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சம்பந்தப்பட்ட கொலைகாரனை `சட்ட ஓட்டைகளிலிருந்து தப்பி விடாமல் சட்டம் சரியாக தண்டிக்க வேண்டும். அதற்க்கு தாங்கள் அனைவர்களும் ஒத்துழைக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்..
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.........
இன்னாஹி லில்லாஹி வஇன்னாஹிலைஹி ராஜிவூன்" விலை மதிக்க முடியாத அந்த உயிர் ஒரு கத்தியில் பரி போய் விட்டது. இளம் வயதினிலே கொடூர எண்ணங்களை கண்டு மனம் கலந்குஹிறது. இறைவன் அனைவருக்கும் பொறுமையை தருவானாக!!! ஆமீன் !!!
தாய் , தந்தை , சகோதரன் , சகோதரி மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையை தந்து அவர்களுடைய பேரிழப்பிற்கு ஈடு செய்ய துஆ செயஹிறேன்.
அல்லாஹ் இறந்த சகோதரனின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து கபுருடைய வேதனையில் இருத்தும் நரகத்தின் வேதனையில் இருத்தும் பாதுகாத்து சுவன வாழ்வை அளிப்பாயாக !!! ஆமீன் !!!!
நான் மனதுக்குள்ளே பாசம் வைத்திருந்த என் தங்க மருமகன் ஹாஜா எங்களை விட்டுப்போய் விட்டான் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) எங்களுக்கு இது தாங்க முடியாத இழப்பு .இந்த இழப்பை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சம்பந்தப்பட்ட கொலைகாரனை `சட்டம் சரியாக தண்டிக்க வேண்டும். அதற்க்கு தாங்கள் அனைவர்களும் ஒத்துழைக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...
மிகவும் வேதனையான செய்தி.நமது சமுதாய அமைப்புகள்,முஹல்லா ஜமாத்துக்கள் சகோதரர்களிடையே ஒற்றுமையினை ஏற்படுத்த முழு முயற்சிகள் மேற்கொள்ளவேண்டிய கட்டாயகடமைஉள்ளது.இதுபோன்ற நிகழ்வுகள் இனி முஸ்லிம் முஹல்லாக்களில் நடைபெறாமல் இறைவனை பிரார்த்திப்போம்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.........
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.........
தவறு செய்தவர்களை கண்டிப்பாக தன்டிக்க வேண்டும். ஊரில் இதுபோல நடப்பது வருத்தமாக இருக்கின்றது
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.........
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.........
எங்கள் குடும்பத்தில் இதுவரை இரண்டு இளம் பிஞ்சுகளை அநியாயத்திற்கு இழந்து இருக்கிறோம் . ஒன்று நமதூரில் நடந்த துப்பாக்கி சூட்டில்(1990) உயிர் நீத்த என் அன்பு மருமகன் நூருல் ஹசன் ,யாரும் மறந்து இருக்க முடியாது. அன்று அதற்க்கு சரியான நியாயம் கிடைக்கவில்லை .இரண்டாவதாக இன்று என் தங்க மருமகன் ஹாஜா . அநியாயத்திற்கு ஒரு நய வஞ்சகனால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டான். இதற்க்கு தக்க தண்டனை கிடைத்திட அனைவரும் பாடுபடுவோம் ..சட்ட ஓட்டையிலிருந்து தப்பி விடாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். அதுதான் ஹாஜாவுக்கு நீங்கள் செய்யும் உண்மையான அறப்பணி ...!
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்...
நினைவில் கொள்க ! நீங்கள் ஒவ்வொரு வரும் பொருப்பாளியே . உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொருப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள் . ஆட்சித் தலைவர் மக்களின் பொருப்பாளராவார் . அவர் தன் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார் . ஆண் தன் குடும்பத்தாருக்குப் பொருப்பாளன் ஆவான் . அவன் , தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான் . பெண் தன் கணவனின் வீட்டாருக்கும் , அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள் . அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள் . ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான் . அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான் . நினைவில் கொள்க ! உங்களில்ஒவ்வொருவரும் பொருப்பாளியே ! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள் .(ஆதாரம் ஷஹீஹில் புஹாரி பாகம் 7 , அத்தியாயம் 93 எண் 7138)
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!