முன்விரோதம் !?



இன்று மக்களிடையே முன்விரோதம் பலவிதங்களில் வளந்து விட்டது.

முன்விரோதங்களினால் சம்பவிக்கும் எத்தனையோ குற்றங்கள் தினந்தோரும் அச்சு ஊடகங்கள் வாயிலாகவும் இணைய ஊடகங்கள் வாயிலாகவும வந்தபடி இருக்கின்றது.


காதலில் முன்விரோதம் பணம் கொடுக்கல் வாங்களில் முன்விரோதம் நிலத்தகராரில் முன்விரோதம் வியாபாரத்தில் முன்விரோதம் சொத்து சேர்ப்பதில் முன்விரோதம் ஆடம்பர வாழ்வில் முன்விரோதம் அரசியல் கட்சிகளில் முன்விரோதம் பொதுச் சேவையில் முன்விரோதம் நண்பர்கள் மத்தியில் முன்விரோதம் படிப்பில் முன்விரோதம் குடும்பத்தில் முன்விரோதம் கணவன் மணைவிக்குள் முன்விரோதம் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்த முன்விரோதத்திற்கு முடிவுதான் என்ன ? அது கொலை. ஆமாம் எதிராளியை கொலை செய்துவிட்டால் அவரால் ஏற்பட்ட முன்விரோதம் மற்றவரை விட்டு அகன்று விடுகிறதா ? இல்லை மாறாக முன்பிருந்ததைக் காட்டிலும் பல தகாத விபரீதங்கள் உண்டாக வாய்ப்பு அதிகரிக்கிறது.

முன்விரோதங்களில் பல வகைகள் இருந்தாலும் எல்லா வற்றையையும் எல்லோரிடமும் சொல்லி சமாதானம் அடையமுடியாது. அந்த வகையில் பார்க்கும்போது சில வகை முன்விரோதங்களை நீதிமன்றங்கள்வரை சென்றால்தான் நீதி கிடைக்கும் சில வகை முன்விரோதங்களை பஞ்சாயத்து என்று சொல்லக் கூடிய பெரியோர்கள்வரை சென்று சமாதானத்தை பெறமுடியும் சில வகை முன்விரோதங்களை பெற்றோர்கள்வரை சென்று ஒற்றுமையை பெறமுடியும் இன்னும் சில வகை முன்விரோதங்களை நண்பர்கள் மூலமாக சரிசெய்து கொள்ளலாம்.

இதற்கும் மேலாய் ஒரு முன்விரோதம் இருக்கு அதை யாரிடமும் சொல்ல முடியாது அப்படியான பட்சத்தில் அந்த இருவர் மட்டும் சந்தித்து சுயமாக ஒரு சுமூகமான முடிவு எடுத்து ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுக்கும்போது சமாதானம் கிடைப்பதோடு நட்பும் வளருகின்றது இதைதான் அன்று சான்றோர்கள் ஒருவர் பொறுத்தல் இருவர் நட்பு என்று சொன்னார்கள்.

இருவரும் விட்டுக்கொடுக்காது இருக்கும்போது நீயா ? அல்லது நானா ? என்று வருகிறது. அந்த நேரத்தில்தான் கடுமையான கோபத்தை வளர்த்துக் கொண்டு பழிதீர்க்க வழிவகுக்கின்றனர்.

இப்படியே போய் கொண்டிருந்தால் இதற்கு முடிவே கிடையாதா ? இவ்வளவு பாரம்பரியமிக்க நமதூர் எத்தனையோ மார்க்க வல்லுனர்களை பெற்ற ஊர் அனேக சமூக அமைப்புகளை உண்டாக்கிய ஊர் வழிபாடுஸ்தலத்திற்கு குறைவே இல்லாத ஊர் எத்தனையோ அறிஞர்கள் ஆசிரியர்கள் மேதாதைகள் என்று பலராலும் தவழ்ந்து வளம் வந்த ஊர்.

மாணவச்செல்வங்களே சகோதரர்களே பெரியோர்களே சிந்தித்து இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முன்வருவோமா

இங்கு உள்ளுர் வாசியோ அல்லது வெளியூர் வாசியோ அது கணக்கு அல்ல நாம் எல்லோரும் மனிதர்கள் அதைத்தான் கணக்கில் கொள்ளவேண்டும்.

இதைப் படிப்பவர்கள் யாராக இருந்தாலும் தங்கள் யோசனைகளை தெரிவிக்கலாம் ஒரு நபர் ஒரு அடி எடுத்து வைக்கும்போது இன்னொரு நபர் நிச்சயம் ஒரு அடி எடுத்து வைப்பார்.

நன்றி

இப்படிக்கு,
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)
 

4 comments:

ஹபீப் HB said...

அஸ்ஸலாமு அழைக்கும்..

முன்விரோதம் என்னாத்தான் இருதாளும் அதற்க்கு கொலை ஒரு முடிவில்லை அப்படி எல்லாம் நினைத்தாள் நம் நாடு ஒரு சுடுக்காடாகிவிடும். மாணவச்செல்வங்களே சகோதரர்களே பெரியோர்களே சிந்தித்து இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

UnmaiVirubi said...

அன்பார்ந்த சமுதாய சகோதரர்களுக்கு அதிரையில் நடந்த இந்த படுகொலை கண்டிக்கதக்கது.ஒருசில விசயங்களை வைத்து ஒரு இயக்கத்தை குற்றமுள்ள இயக்கமாக இதுபோன்ற சமுக வலைதளத்தில் பதிப்பது நல்லதல்ல. சட்டரீதியிலான தீர்வுக்கு உதவி புரியுங்கள். அது நடைபெற்ற படுகொலைக்கும் இறந்த சகோ ஹாஜாவின் குடும்பத்திற்கும் நீங்கள் செய்யும் உதவி.

UnmaiVirubi said...

முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் மீடியாக்கள் கூட கூட முன்விரோதமாக கொலை நடந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.ஆனால் மொத்த பாசிசத்தின் மறுஉருவம் எடுத்திருக்கும் இந்த TNTJ வினர் மற்றும் அவதூறுகளை பரப்பும் நோக்குடன் தவறான செய்தியை வெளியிட்டு வருகின்றனர்.குரானையும் கதிசையும் பின்பற்றுவதாக கூறும் இவர்களுக்கு நபி (ஸல்) அவதூறை பற்றி கூறிய கதிசை பின்பற்றாமல் இருப்பது ஏன்.

தௌஹீத் வாதிகளை உங்கள் கேடு கேட்ட இயக்கம் எது சொன்னாலும் அப்படியே நம்பி கொண்டு இருப்பது சரியல்ல ..உங்களுக்கும் அல்லாஹ் எது சரி எது தவரெண்டு சிந்திக்கும் தன்மையை கொடுத்துள்ளான்.நாளை அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள் ...இயக்க வெறி உங்கள் கண்களை இஸ்லாத்தை விட்டு அப்புறப்படுத்திட வேண்டாம் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்

சேக்கனா M. நிஜாம் said...

சமிபத்தில் நமதூரில் நடைபெற்ற துன்பியல் நிகழ்வு குறித்து வருகின்ற 07-12-2012 அன்று நடைபெற உள்ள அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் கூட்டத்தின் கவனத்துக் எடுத்துச்செல்லப்படும்.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!