பிலால் நகர் இஸ்லாமியப் பயிற்சி மையத்தில் 30.11.2012-ல் நடைபெற்ற நிகழ்ச்சிக் குறிப்புகள்


அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வின் அருளால், 30.11.2012 அன்று மாலை 4:30-5:30 இஸ்லாமியப் பயிற்சி மையத்தில் நடைபெற்ற சிறப்புச் சொற்பொழிவு மிகவும் நேர்த்தியாக இருந்தது. 200 பேருக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர், அல்ஹம்து லில்லாஹ்!






"நம் பிள்ளைகளுக்கு ஏராளமாகப் பணம் செலவழித்து ஊட்டப்படும் கல்விகள், ஈமானுடைய அடிப்படை இல்லாமல் போகுமாயின் அவ்வகைக் கல்விகள், நம் சமுதாயத்தில் நடைபெறும் ஒழுக்கக் கேடுகளையும் தீமைகளையும் களைய உதவாது" எனும் கருத்தில் சிறப்புரை அமைந்திருந்தது. நம் இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தை ஈமான் உறுதியோடு கட்டமைப்பதால் மட்டுமே நம் சமுதாயத்தில் நிலவுகின்ற சீரழிவுகளைத் தடுக்க முடியும் என்பதாக அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரியின் முதல்வர் ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில், இஸ்லாமியப் பயிற்சி மையத்தில் பயில்வதற்காக 77 பெயர்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கை நாம் எதிர்பாராததாகும். மேலும், அடுத்த வாரம் மத்ரஸா தொடங்கலாம் என நினைத்திருந்த நமக்கு, "நாளைக்கே மத்ரஸா தொடங்கவேண்டும்" என்று வந்திருந்த பெற்றோர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டு, முதல்வரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப் பின்னரும் பயான் ஏற்பாடு செய்யவேண்டும் என்ற வருகையாளர்களின் வேண்டுகோள் ஏற்கப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிக்கிழமை (07.12.2012) 'வட்டியின் விபரீதம்' என்றும் தலைப்பில் பயான் என்று அறிவிப்புச் செய்யப்பட்டது.

வெள்ளிக்கிழமை தவிர்த்து, எல்லா நாளிலும் பயிற்சி நேரம் அதிகாலை 6 மணிக்கு ஒரு ஷிஃப்ட்; மாலை 5 மணிக்கு மறு ஷிஃப்ட் என்று அவர்களுக்குள் ஆலோசித்து முடிவு செய்து கொண்டனர்.

நேற்று காலையில் 114 மாணவியர் வந்திருந்தனர் & மாலையில் 102 வந்திருந்தனர்.

நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ்


2 comments:

அப்துல் ஜலீல்.M said...

இன்ஷாஅல்லாஹ்

தொய்வின்றி தொடர்ச்சியாக இந்த பணிகளை செய்துவருவதற்கு அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.வாழ்த்துக்கள்

ஹபீப் HB said...

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர். மனசு நேரச்சி இருக்கு இதை பார்க்கும் பொழுது.இது போன்று நம் ஊரில் உள்ள எல்லா தெருக்களிலும் நடைப்பெறவேண்டும் , இன்ஷா அல்லாஹு நாம் அனைவரும் துவா செய்வோம்.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!