பெண்கள் செல்ஃபோன் பயன்படுத்தத் தடை!


பெண்கள் செல்பேசி பயன்படுத்தத் தடை விதித்து இந்தியாவின் பீகார் மாநிலப் பஞ்சாயத்து ஒன்று உத்தர விட்டுள்ளது.

எந்தப் பெண்ணாவது செல்பேசி  பயன்படுத்துவது தெரியவந்தால் ரூ.10,000 அப்ராதம் விதிக்கப்படும் என்றும், கல்யாணமான பெண்கள் வீட்டுக்கு வெளியே செல்பேசி உபயோகித்தால் ரூ.2,000 அபராதம் கட்ட வேண்டும் என்றும் அந்தப் பஞ்சாயத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

பீகாரின் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் கொச்சாதாம் வட்டத்தில் உள்ள சுந்தர்பாதி என்னும் அக்கிராமத்தில் பஞ்சாயத்து உறுப்பினர்களும், ஊர்ப் பெரியவர்களும் கூடி இம்முடிவை எடுத்ததாக பஞ்சாயத்துக்கூட்டத்திற்குத் தலைமைத் தாங்கிய முஹம்மது மன்சூர் ஆலம் என்பவர் தெரிவித்துள்ளார். " இந்த செல்ஃபோன்களால் சமூகத் தீமைகள் பெருகிவிட்டன. மாணவப் பருவத்தில் காதல், வீட்டை விட்டு ஓடிப் போவது ஆகிய செயல்களை செல்ஃபோன் மூலம் அதிகரிக்கக் காண்கிறோம்" என்று அவர் கூறினார்.
கல்வியறிவின்மையும், வறுமையும் நிரம்பிய மிகவும் பிந்தங்கிய மாவட்டமாக கிஷன்கஞ்ச் உள்ளது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!