அதிரையில் அதிசயம் ஒரு கிலோ கோழிக்கறி 90/- ரூபாய் !






அதிரையில் அதிசயமாக கடந்து சில நாட்களாகவே ஒரு கிலோ பிராய்லர் கோழி இறைச்சி ரூபாய் 90/- ராக விற்பனை செய்து வருகின்றனர் மேலத்தெருவில் அமைந்துள்ள நசுருதீன் கோழிக் கடையில் சல்லிசாக கிடைக்கும் கோழி இறைச்சியை வாங்குவதற்காக தினமும் கூட்டம் அலைமோதி வருகின்றன.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் 'சின்னவன்' என்கிற சேக் நசுருதீன் அவர்களை அணுகி விசாரித்த வகையில்...

"அதிரையில் உள்ள மற்ற கடைகளில் ஒரு கிலோ கோழி இறைச்சி ரூபாய் 140/- முதல் ரூபாய் 180/- வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எங்களின் வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் நோக்கில் குறைந்த லாபம் அதிக விற்பனை என்ற திட்டத்தின் கீழ் முயற்சித்து வருகின்றோம் மேலும் நாங்கள் கோழிப்பண்ணைகளில் நேரடியாக சென்று கொள்முதல் செய்து வருவதால் பொதுமக்களுக்கு பயனுறும் வகையில் எங்களால் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிகின்றது. கடந்த சில நாட்களாகவே நமதூர் பொதுமக்கள் பல்வேறு தெருக்களிளிருந்து வருகை தந்து கோழி இறைச்சியை வாங்கிச் செல்கின்றனர். மேலும் ஆரோக்கியமான கோழிகளை கொள்முதல் செய்து அவற்றை பாதுகாத்து ஹலாலான முறையில் சுத்தப்படுத்தி விற்பனை செய்கின்றோம்." என்கிறார்.

டெலிபோன் செய்து ஆர்டர் செய்தால் இலவச டோர் டெலிவரி வசதியும் செய்து கொடுக்கின்றனர். நாமும் நமது பங்குக்கு ஒரு கிலோ கோழி இறைச்சி ஆர்டர் செய்துவிட்டு, அந்த இளைஞரின் தொழில் ஆர்வத்தை பாராட்டிவிட்டு அங்கிருந்து விடைபெற்றோம்.

தொடர்புக்கு : 9965240616






 
 
 

புகைப்படம் உதவி : அப்துல் ரஹ்மான்
thanks adirai news

1 comments:

ஹபீப் HB said...

பதிவுக்கு நன்றி.நல்லதோர் தகவல் நடுத்தரமக்களுக்கு பயன்படும்.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!