கோடைகாலத்தில் இருக்க முடியாது. அவர்களுக்கு எப்போதும் அதிக வெப்பம் ஆகாது. ஆகவே கோடைக்காலம் ஆரம்பிக்கப் போகிறது என்றால், அதற்கு முன்னரே குழந்தைகளை குளிர்ச்சியுடன் வைப்பதற்கு சிந்திக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு அதிகம் வியர்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதற்கு அவர்களுக்கு வேண்டிய சூழ்நிலையை வீட்டிற்குள்ளேயே ஏற்படுத்தி தருவதோடு, ஒருசில செயல்களையும் மேற்கொள்ள வேண்டும்.
சரி, இப்போது குழந்தைகளை கோடைக்காலத்தில் குளிர்ச்சியுடன் வைப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்ப்போமா!!!
* கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு இறுக்கமான உடையை உடுத்தாமல், நன்கு லூசாக இருக்கும், அதிக வெயிட் இல்லாத ஆடைகளை உடுத்த வேண்டும். அதிலும் எப்போதுமே குழந்தைகளுக்கு காட்டன் உடைகள் தான் சரியானதாக இருக்கும். மேலும் எங்காவது குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டுமெனில், அவர்களுக்கு வெளிர் நிற நீளமான பேண்ட் மற்றும் சட்டைகளை அணிவித்து, முகத்தில் வெயில் படாதவாறு தொப்பியை போட்டு அழைத்துச் செல்ல வேண்டும்
* தற்போது சூரியக் கதிர்களின் தாக்குதல் அதிகப்படியாக இருப்பதால், குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக மதிய வேளையில் அழைத்து செல்வதை அறவே கூடாது.
* குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் போது, நல்ல காற்றோட்டமாக இருக்கும் குழந்தைகளை வைத்து தள்ளிக் கொண்டு செல்லும் தள்ளுவண்டியைப் பயன்படுத்துவது நல்லது. மேலும் இவ்வாறு தள்ளுவண்டி வாங்கும் போது, குழந்தைகளை இறுக்குமாறு இல்லாமல், சற்று இடம் அதிகமாக இருக்கும் வகையில் வாங்குவது நல்லது. அதிலும் எடைகுறைவாக உள்ள நைலானால் செய்யப்பட்ட தள்ளுவண்டியை பயன்படுத்துவது நல்லது.
* கோடை காலத்தில், அதிக வெப்பத்தின் காரணமாக உடலில் வறட்சியானது அதிகமாக இருக்கும். எனவே குழந்தைகளுக்கு அவ்வப்போது அதிகப்படியான தண்ணீரைக் கொடுத்து வர வேண்டும். இதனால் உடல் வறட்சியை நீக்கலாம்.
இவையே குழந்தைகளை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதற்கான சில எளிமையான வழிகள்...
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!