
ஆசைகள் பல்லாயிரம் வகை உள்ளன...அதில் ஆதங்க ஆசைகள் சில இங்கே பார்ப்போம்..!
ஓடிவரும் பிள்ளைக்கு தாய் மடியில் படுக்க ஆசை
தாய் மனமோ தன் பிள்ளைகள் ஓடிப்பிழைக்க ஆசை
பாடம் பயிலும் மாணவனுக்கு பட்டம் பெற ஆசை
பட்டம் பெற்ற மாணவனுக்கு புலம்பெயர ஆசை
மனைவி மீது கணவனுக்கு காதல் புரிய ஆசை
கணவனிடம் மனைவிக்கோ காசின் மேல் ஆசை
பணம் பெருத்தவன் கண்களுக்கு பல உணவின் மேல் ஆசை
பல உணவு ருசித்தவனிடம் பணம் பிடுங்க மருத்துவருக்கு ஆசை
நாட்டை ஆள தலைவர்களுக்கு நாற்காலியின் மேல் ஆசை
நல்லவர் அமர்ந்து நன்மைகள் செய்திட நாற்காலிக்கு ஆசை
தொன்றுதொட்டு கட்சி வளர தொண்டனுக்கு ஆசை
தொண்டனையும் தியாகியாக்கி கட்சி வளர்க்க தலைவர்களுக்கு ஆசை
ஈழம் வென்று இருப்பிடம் செல்ல வீரத்தமிழர்களுக்கு ஆசை
வீரத்தமிழர் வீழ்ந்து மடிய இன வெறியர்களுக்கு ஆசை
தீங்குகள் செய்து குற்றம் புரிந்தவன் திருந்தி வாழ ஆசை
திருந்தியவன் குற்றங்கள் செய்ய தீய நண்பனுக்கு ஆசை
ஆண்டியும் அரசனாக அரசாகத்திற்க்கு ஆசை
அரசாங்கமே ஆண்டியாக அரசியல்வாதிகளுக்கு ஆசை
நலிந்தோரின் துயர்துடைக்க நாடாளுமன்றத்திற்கு ஆசை
நாடாளுமன்றமே நலிந்து விட நயவஞ்சகர்களுக்கு ஆசை
கூடி வாழ ஒன்று கூட குடும்பத்தலைவனுக்கு ஆசை
குடும்பம் சிதைக்க ஒன்று கூட கூடி வாழ்பவனுக்கு ஆசை
ஆசைகளை அடக்கியாள ஆன்மீக வாதிகளுக்கு ஆசை
ஆன்மீகமும் அடிபணிய அந்த ஆசிரமங்களுக்கு ஆசை
படைத்தவனிடம் மன்னிப்பு கோர பாவம் செய்தவனுக்கு ஆசை
பாவம் செய்தவனும் திருந்தி வாழ படைத்தவனுக்கு ஆசை
ஆசைகள் கோடியாய் பெருகி ஆன்மாவை ஆள ஆசை
ஆன்மாவும் ஆசைகளாய் அனைத்துலகையும் ஆள ஆசை !
அதிரை மெய்சா
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!