சென்னை: இந்தியாவில் கடந்த 2006ம் ஆண்டு 10 கிராம் தங்கம் ரூ. 8400க்கு விற்கப்பட்டது. ஆனால் அதே 10 கிராம் தங்கம் இந்த ஆண்டு தொடக்கத்தில் 3 மடங்கு விலை உயர்ந்து ரூ.27,000க்கு விற்கப்பட்டது. ஒரு சில சொத்துக்கள் மட்டுமே இவ்வாறு 7 ஆண்டுகளில் 300 சதவீத லாபத்தைத் தரும்.

இந்தியாவில் 10 கிராம் தங்கம் ரூ.12,500க்கு விற்கப்பட்டு வந்தது. குறிப்பாக லீமன் பிரதர்ஸ் நிறுவனம் திவால் மற்றும் உலக அளவில் பொருளாதார மந்தம் காரணமாக தங்கத்தின் விலை எகிற ஆரம்பித்தது. உலக அளவில் பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். அதனால் உலக அளவிலும் மற்றும் இந்திய அளவிலும் தங்கத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கியது.
2009 ஆம் ஆண்டு.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து எவ்வாறு தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது என்பதைப் பார்ப்போம். மேலும் உலக தங்கத்தின் விலையை வைத்தே இந்தியாவிலும் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
2008 ஆம் ஆண்டு.

இந்தியாவில் 10 கிராம் தங்கம் ரூ.12,500க்கு விற்கப்பட்டு வந்தது. குறிப்பாக லீமன் பிரதர்ஸ் நிறுவனம் திவால் மற்றும் உலக அளவில் பொருளாதார மந்தம் காரணமாக தங்கத்தின் விலை எகிற ஆரம்பித்தது. உலக அளவில் பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். அதனால் உலக அளவிலும் மற்றும் இந்திய அளவிலும் தங்கத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கியது.
2009 ஆம் ஆண்டு.
10 கிராம் தங்கத்தின் விலை ரூ.15000க்கு தாவியது. உலக அளவிலும் தங்கத்தின் விலை அதிகரித்தது. குறிப்பாக உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் மற்றும் அமெரிக்காவின் பொருளாதார சரிவு போன்றவை இந்த விலையேற்றத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.
2010 ஆம் ஆண்டு.
2010 ஆம் ஆண்டிலும் தங்கத்தின் விலை இந்தியாவில் ஒரு படி உயர்ந்து ரூ.18,000க்கு(10 கிராம்) விற்கப்பட்டது. தங்கத்தில் முதலீடு செய்தால் அது பாதுகாப்பாக இருக்கும் என்று கருதி பலர் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். மேலும் முந்தைய ஆண்டுகளில் பங்குச் சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் ஏற்பட்ட சரிவும், முதலீட்டாளர்களைத் தங்கத்தின் பக்கம் திருப்பியது.
2011 ஆம் ஆண்டு.
இந்தியாவில் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து 10 கிராம் தங்கம் ரூ.26,000க்கு விற்பனை செய்யப்ட்டது. அதற்கு முக்கிய காரணம் கிரீஸ் மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வீழ்ச்சி என்று கருதப்பட்டது. மேலும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பங்குச் சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் துறைகள் பெரும் சரிவைச் சந்தித்ததால் பலரும் தங்கத்திலேயே அதிகமாக முதலீடு செய்தனர்.
2012 ஆம் ஆண்டு.
இந்தியாவில் தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்தது. அதாவது 10 கிராம் தங்கம் ரூ.32,000க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் இந்திய ரூபாயின் மதிப்பும் பெருமளவில் சரிந்தது.
2013 ஆம் ஆண்டு.
2008 முதல் 2012 ஆம் ஆண்டு வரை ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சற்று சரிவை சந்தித்திருக்கிறது. அதற்கு அமெரிக்காவின் பொருளாதார எழுச்சி மற்றும் அமெரிக்க பங்குச் சந்தையான டவ் ஜோன்சின் எழுச்சி மற்றும் ஜப்பானின் பங்குச் சந்தை வளர்ச்சி போன்றவை காரணங்களாக கூறப்படுகின்றது.
தற்போது பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் அதிகமாக முதலீடு செய்ய தொடங்கி இருக்கின்றனர். அதன் மூலம் உலக பொருளாதார மந்தம் விரைவில் நீங்கும் என்று நம்புகின்றனர். தற்போது இந்தியாவில் 10 கிராம் தங்கம் ரூ. 26,000க்கு விற்பனையாகிறது. இந்த விலை கடந்த 2 ஆண்டுகளைவிட குறைவாகும்.
தற்போது பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் அதிகமாக முதலீடு செய்ய தொடங்கி இருக்கின்றனர். அதன் மூலம் உலக பொருளாதார மந்தம் விரைவில் நீங்கும் என்று நம்புகின்றனர். தற்போது இந்தியாவில் 10 கிராம் தங்கம் ரூ. 26,000க்கு விற்பனையாகிறது. இந்த விலை கடந்த 2 ஆண்டுகளைவிட குறைவாகும்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!