
இவரைப்பற்றிய சிறு குறிப்பு :
'மெய்சா' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் இவரின் இயற்பெயர் A. முகைதீன் சாகிப். அதிரை நடுத்தெருவை பிறப்பிடமாய் கொண்டாலும் கீழத்தெருவை இருப்பிடமாய் பெற்று தற்போது வசிப்பிடமாய் மேலத்தெரு சானா வயலில் குடியமர்ந்து, அமீரகத்தில் பணிபுரிந்து வருகின்றார்.
சிறுவயது முதல் கவிதை - கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உள்ள இவர் சமூக விழிப்புணர்வு பக்கங்களில் தொடர்ந்து விழிப்புணர்வூட்டும் ஆக்கங்கள் / கவிதைகள் எழுதி பலரின் பாராட்டை பெற்று வருகின்றார். மேலும் உள்ளூர் நிகழ்வுகளை உடனுக்குடன் பதிந்து வரும் வலைதளமாகிய 'அதிரை நியூஸ்' குழுமத்தில் ஒருவராகவும் இருந்து வருகிறார்.
இலண்டன் வானொலியிலும் இவருடைய கவிதைக்கு அங்கீகாரம் கிடைத்து வாசித்திருப்பது நமதூருக்கு மட்டுமல்லாமல் எதிர்கால புதிய தலைமுறையினரின் எழுத்தார்வத்தைத் தூண்டுகின்ற விதமாக அமைந்துருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சிக்குரியது.
அதிரை நியூஸ் குழுமத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.
ஏங்கி நின்றான் ! ஏக்கம் தொடர்கிறது…
பள்ளிப்பருவத்து முன்பருவத்தில்
பகல் உணவில் கூட பால் தந்த
அந்த அன்னையின் பாசம்
இன்று தூரமாகி போனதை எண்ணி
ஏங்கி நின்றான் !
பள்ளிப்பருவம் எட்டியதும்
பார்ப்போர் வியக்க பணிவிடை செய்து
பாடசாலை அனுப்பி வைத்த காட்சி நினைத்து
ஏங்கி நின்றான் !
படித்தது போதும் என்று
பாதிலேயே கல்வி விட்டு
பன்னாட்டு விமான நிலையம் கண்டு
புலம்பெயரும் கனவு சுமந்து
பாசத்தை தூரமாக்கி
ஏங்கி நின்றான் !
வாப்பா பார்த்து, உம்மா பார்த்து
வரதட்சணை கண் மறைத்து
வாயாடிப்பெண்ணை மணந்து
அன்புக்காக
ஏங்கி நின்றான் !
வாப்பாவை பார்க்காமலே
வாப்பாவின் பாசம் அறியாமலே
மூன்றுவயதை தொடும்போது
தாயகம் போய்
தான் ஈன்ற தங்கப்பிள்ளை
தன்னிடம் வருமா என்று
ஏங்கி நின்றான் !
சுற்றித்திரிந்த காலங்களில்
சுதந்திரம் கற்றுத்தந்து
பட்ட கஸ்டங்களில்
பாதி பங்கெடுத்த
அன்பு நண்பர்களை பிரிந்து
ஏங்கி நின்றான் !
.
அயல்நாட்டு நிரந்தர வாழ்க்கை
நிரந்தரமாக அந்நியமாகி
அனாதை போல் வாழ்ந்து விட்டு
முதுமை அடைந்தும் அறியாமல்
முடியாமல் ஊர் திரும்பும் காலம் வந்து
உறவுக்காகவும்
உண்மையான அன்புக்காகவும்
ஏங்கி நின்றான் !
குறிப்பு : இந்தக் கவிதையின் காணொளித் தொகுப்பு விரைவில் தளத்தில் சேர்க்கப்படும்.
நன்றி அதிரை நியூஸ்.
குறிப்பு: அதிரை ஈஸ்ட் குழுமத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.
4 comments:
Congregation,
Best. Regsrds
Congregation,
Best. Regsrds
தம்பி மெய்ஷா எனது வாழ்த்துக்களும் துவாவும்
what a fantastic lyrics, there is no word to explain about your lyrics.
keep up the good work, we expect more from you.
My best wishes for your upcoming lyrics
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!