சவூதி அரேபியாவின் புதிய 'நிதாகத்' என்ற தொழிலாளர் சட்டம் உண்மையான ஊழியர்களை பணியமர்த்த புதிய பாதையை திறந்து விட்டுள்ளது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்:
"சவூதி அரேபியாவின் 'நிதாகத்' என்ற புதிய சட்டத்தால் பலர் அச்சமடைந்துள்ளனர். ஆனால், முறையான ஆவணத்துடன் செல்லும் எந்த ஒரு உண்மையான ஊழியர்களையும் இந்த சட்டம் பாதிக்காது. இந்திய தொழிலாளர்கள் சவூதி அரேபிய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றி வருகின்றனர். இதை சவூதியும் அங்கீகரித்துள்ளது.
எனவே சட்டவிரோதமாக அங்கு பணிபுரிபவர்களையும், முறையான ஆவணங்கள் இல்லாமல் பணிபுரிபவர்களை மட்டுமே இந்த சட்டம் பாதிக்கும்" என்று சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
ஜூன் 9 ம் தேதிக்குள் சவூதியில் சட்ட விரோதமாக பணிபுரிபவர்கள் மற்றும் முறையாக ஸ்பான்சர் மாற்றாமல் பணிபுரிபவர்கள் சவூதியை விட்டு வெளியேற வேண்டும் என்று சவூதி அரசாங்கம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி:இந்நேரம்.காம்
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!