துபாயிலிருந்து ஷார்ஜாவிற்கு கடலுக்கடியில் பேருந்துப் பயணம் விரைவில்!


 
துபாயிலிருந்து ஷார்ஜாவிற்கு, வாகனப்போக்குவரத்து மிகவும் நெரிசல் மிகுந்த ஒன்றாக மாறிவிட்டது. சாலைகளை அகலப்படுத்த இயலாது என்ற நிலையில், இதற்கான புதிய ஏற்பாடுகளைப் பற்றி அரசு தீவிரமாக ஆலோசனை செய்துகொண்டிருந்த காலகட்டத்தில், தோன்றியதுதான் இந்தக் கடலுக்கடியில் பேருந்துப் போக்குவரத்துத் திட்டமாகும்.
 
 இதுகுறித்த ஆரம்பகால ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், போக்குவரத்துத்துறை ஆணையத்தின் அனுமதி கிடைத்தபின், கடலுக்கடியில் பேருந்துப் போக்குவரத்து குறித்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும், பொதுமக்கள் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர், யூசுப் முகமது அல் அலி, பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
 
இப்போது நெடுஞ்சாலை மார்க்கமாக இரு மாநிலங்களையும் இணைக்கும் பேருந்துப் போக்குவரத்து உள்ளது. பெருகி வரும் வாகனங்களையும், சாலைகளின் இடப்பற்றாக்குறையையும் பார்க்கும்போது, இதேபோன்ற, கடலுக்கடியிலான வாகனப்போக்குவரத்தைத் தொடங்கலாம் என்று அவர் மேலும் கூறினார்.
 
 ஷார்ஜாவில் கடலுக்கு அடியிலான நிறுத்தங்களுக்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும், போக்குவரத்து ஆணையம் பயணிகளின் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றைக் குறித்து ஆய்வு செய்தபின், பயண மார்க்கங்களைக் குறித்த தகவல்களை வெளியிடும். பொதுமக்கள் போக்குவரத்தினை விரிவுபடுத்துவதும், வெவ்வேறு வகையான போக்குவரத்துத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதும் துபாய் போக்குவரத்து ஆணையத்தின் சிறப்பு திட்டமாகும். ஆயினும், எப்போது இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறுவதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது என்றும் யூசுப் முகமது தெரிவித்தார்.

3 comments:

அதிரை.மெய்சா said...

செய்தி அறியத்தந்தமைக்கு நன்றி.

அப்துல் ஜலீல்.M said...

பதிவு க்கு நன்றி . எதிர்பார்த்த ஒன்று ll

Unknown said...

Good Thought,If it will be implemented the motorist will be Happy.

Insha Allah Hope for the best

we will wait for it.


Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!