
இந்த விழிப்புணர்வு தரும் கவிதையை அங்கீகரித்து இலண்டன் தமிழ் வானொலியில் கடந்த [ 25-04-2013 ] வியாழன் அன்று ஒளிப்பரப்பு செய்தது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.
கடந்த அன்றும் [ 11-04-2013 ] இவரின் 'ஏங்கி நின்றான்' என்ற தலைப்பிட்ட விழிப்புணர்வுக் கவிதையை ஒளிபரப்பு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தவர் எதிர்பார்ப்பு :
மண்ணுலகின் மாயவாழ்வில்
மடிதனில் நீ தவழும்போதே
விண்ணுயர வளர்ந்திட்டு
வீறுகொண்டு நின்றிடவே
உள்மனதில் உன்மீது
உறக்கமில்லா கனவுகளில்
கறக்கத்துடன் காத்திருக்கும்
தாயவளின் எதிர்பார்ப்பு
பஞ்சம் பசி போக்க்கிடத்தான்
பாரினிலே வாழ்ந்திடத்தான்
நெஞ்சம் உருகி கேட்டிடும்
நிர்க்கதியான மனிதர்கள்
தஞ்சம் என்று தரணியிலே
தவமாய் கிடந்தும் பாராமல்
கொஞ்சம் ஈரம் படைத்தவர்கள்
கொடுத்துதவும் கரங்களாய்
தர்மம் ஒரு எதிர்பார்ப்பு
கண்ணுக்கு இமையாக
கருமேகத்து மழையாக
மின்னிவரும் ஒளியாக
மிளிர்ந்திருக்கும் உடையாக
கொடியிடையில் நடையாக
கோடிப்பூக்கள் உடலாக
சொல்லில் அடங்கா வரியாக
சுகமான நினைவாக
காதல் ஒரு எதிர்பார்ப்பு
ஆசானின் ஆசைகளோ
அன்பான மாணாக்கள்
அகம் மகிழ தேர்வாகி
அவன் வாழ்வு சிறந்திட்டு
அகிலத்தில் திழைத்திட்டு
அன்புடனே ஆதரிக்கும்
அடியேனை மறவாது
அனுதினமும் நினைவுகூற
அன்னவரின் எதிர்பார்ப்பு
வாக்குகள்பெற வாக்குறுதிபல
வழங்கிட்ட தலைவர்கள்
நாக்குறுதி இல்லாமல்
நழுவிச்செல்லும் செயல் கண்டு
நாட்டுமக்கள் நலம் பயக்க
நல்லவர்கள் ஆட்சி செய்ய
நா வறண்டு நடுப்பகலில்
நடத்திட்ட போராட்டம்
மக்களின் ஒரு எதிர்பார்ப்பு
எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏமாந்த நிலைகண்டு
துகில்பாடி வளம் வந்து
தொடரான அவலம் கண்டு
மதியதனை மனம் வென்று
மகிழ்வதனை பகிர்ந்திட்டு
சிறப்புடனே சீராட்டி
செழிப்புடனே வாழ்ந்திருக்க
அனைத்து ஆன்மாக்களின் எதிர்பாப்பு
1 comments:
மீண்டும் நமது தமிழ் மக்கள் காதில் புயல் அடித்த அதிரை மெய்ஷா காக்காவின் கவிதைவரிகள் அருமை.
இன்னும் தொடர வாழ்த்துக்கள்.
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!