தமீம் அன்சாரி கைது உத்தரவு - உயர் நீதிமன்றம் ரத்து!



மதுரை: தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்ட தமீம் அன்சாரியின் கைது உத்தரவை மதுரை உயர் நீதிமன்றம் நேற்று ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி இந்திய இராணுவ ரகசியங்கள், இராணுவப் பயிற்சி மையம், கடலோரக் காவல்படையின் பணிகள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள், ஒளிப்பதிவுகள், வரைபடங்களை இலங்கைக்கு கடத்த முயன்றதாக திருச்சி கியூ பிரிவு காவல் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.

இந்த நிலையில் இதனை எதிர்த்து அவரது மனைவி, " தன் கணவர் எவ்வித குற்றத்திலும் ஈடுபடாதவர்.காவல்துறையினர் கட்டாயப்படுத்தி, ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். இவர் மீது பாய்ந்துள்ள தேசிய பாதுகாப்புச் சட்டம் - என்.எஸ்.ஏ.,வில் கைது செய்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்" என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதுகுறித்த விசாரணையின் பின்பு நீதிபதி  ஏ.செல்வம், எம்.சத்தியநாராயணன் பிறப்பித்த உத்தரவில் , "தமீம் அன்சாரி வெறும் யூகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் மேலும் எந்த ஆதாரங்களையும், அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப் படவில்லை, எனவே தமீம் அன்சாரி என்.எஸ்.ஏ.,வில் கைது செய்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது." இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!